ரூ.10 லட்சம் வரை கடன் கிடைக்கும்; லாபம் தரும் காளான் வளர்ப்பு; நேரடி பயிற்சி!

காளான் வளர்ப்பு நேரடி பயிற்சி

பசுமை விகடன் மற்றும் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் இயங்கும் EDII தோட்டக்கலை தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து வருகிற ஆகஸ்ட் 30-ம் தேதி, சனிக்கிழமை `லாபம் கொடுக்கும் காளான் வளர்ப்பு’ என்ற நேரடி பயிற்சியை நடத்த இருக்கிறது.

அறிவிப்பு

இந்தப் பயிற்சியில் காளான் வளர்ப்பை தொடங்க எவ்வளவு இடம் தேவைப்படும். கொட்டகை அமைப்பது எப்படி, காளான் வளர்ப்பு பைகளை தயார் செய்யும் முறைகள், விதைகள் எங்கு கிடைக்கும், பேக்கிங் செய்வது எப்படி, சந்தைப்படுத்தும் முறைகள் உள்ளிட்ட பல விஷயங்கள் நேரடி பயிற்சியின் மூலம் சொல்லிக் கொடுக்கப்பட உள்ளன. தோட்டக்கலை கல்லூரியின் பேராசிரியர்கள், காளான் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோர் இந்தப் பயிற்சியை வழங்க இருக்கிறார்கள்.

கடன் கொடுத்து அரசு ஊக்குவிக்க காரணம்..

பெரியகும், தோட்டக்கலை தொழில்முனைவோர் மேம்பாட்டு மையத்தின்(EDII) முதன்மை செயல் அலுவலர் வசந்தன் செல்வம் பேசியபோது, “காளான்கள் வளர்க்க வேண்டும் என்பவர்களுக்கு அரசு கடன் உதவிகள் கிடைக்கின்றன. முத்ரா தொழில் கடன் திட்டத்தின் கீழ் 10 லட்சம் வரை கடன் கிடைக்கும்.

விவசாய உள்கட்டமைப்பு நிதி (Agriculture Infrastructure Fund – AIF) திட்டத்தின் கீழ் குறைந்த வட்டியில் 2 கோடி வரை கடன் கிடைக்கும். தமிழ்நாடு அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் 6 லட்சம் வரை 35 சதவிகித மானியத்துடன் கடன் கிடைக்கும்.

வசந்தன்
செல்வம்

கடன் கொடுத்து காளான் வளர்ப்பு தொழிலை அரசு ஊக்குவிக்கிறது. காரணம், காளான்களின் தேவை அதிகமாக இருக்கிறது.

இந்தத் தொழிலில் ஈடுபட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இதற்கான பயிற்சிகளைக் கொடுத்து, செட் அமைப்பது வரை எங்களின் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையத்தின் மூலம் உதவி வருகிறோம்.

பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள, காளான் வளர்ப்பு கொட்டகையையும் பார்வையிடலாம். காளான் வளர்ப்பு பற்றி விரிவாக தெரிந்துகொள்ள பயிற்சியில் கலந்துகொள்ளுங்கள்” என்றார்.

பயிற்சி விவரம்

பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் முன்பதிவு செய்து கலந்துகொள்ளலாம்.

நாள்: 30-8-2025, சனிக்கிழமை.

நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை

இடம்: EDII தோட்டக்கலை தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம்.

தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மற்றும் நிலையம், பெரியகுளம், தேனி மாவட்டம்.

அறிவிப்பு

சிறப்பம்சங்கள்

காளான் வளர்ப்பதற்கான தொழில்நுட்ப முறைகள், நேரடி செயல்விளக்கம்.

காளான் குடில்கள் மற்றும் கொட்டகை அமைப்பதற்கான வழிகாட்டல்கள்.

காளான் பெட்கள் தயார் செய்யும் முறைகள். காளான் பேக்கிங் முறைகள் மற்றும் சந்தைப்படுத்துதல்.

காளான் விற்பனைக்கான சந்தை வாய்ப்புகள்.

காளான் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோரின் அனுபவ உரைகள்.

காளான் வளர்ப்பில் ஈடுபடுவதற்கான முதலீடு மற்றும் இடம் உள்ளிட்டவற்றுக்கான வழிகாட்டல்கள்.

காளான் வளர்ப்பில் நவீன தொழில்நுட்பங்களுக்கான வழிகாட்டல்கள்.

இன்னும்… இன்னும்..

பயிற்சி கட்டணம்

பயிற்சி கட்டணம்: 1,200 ரூபாய் (பயிற்சியில் நோட் பேட், பேனா, தேனீர், சான்றிதழ், மதிய உணவு போன்றவை வழங்கப்படும்).

qr code

கட்டணம் செலுத்த க்யூ.ஆர் கோடை ஸ்கேன் செய்யவும் (கூகுள் பே, அமேசான் பே, போன் பே,பே.டி.எம்). கட்டணம் செலுத்திய விவரம் மற்றும் உங்கள் முகவரியை 99400 22128 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பவும். மேலதிக விவரங்களுக்கு இதே எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

கூகுள் மேப் லிங்க்:

https://www.google.com/maps/place/entry=ttu&g_ep=EgoyMDI1MDgxOS4wIKXMDSoASAFQAw%3D%3D

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.