மேற்கு வங்கம், ஒடிசா உட்பட பல மாநிலங்களில் என்ஆர்ஐ எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையில் மோசடி

புதுடெல்லி: வெளி​நாட்டு வாழ் இந்​தி​யர்​களுக்கு ஒதுக்​கப்​பட்ட எம்​பிபிஎஸ் இடங்​களை போலி ஆவணங்​கள் மூலம் மோசடி செய்திருப்​பது அமலாக்​கத் துறை விசா​ரணை​யில் தெரிய வந்​துள்​ளது. இந்​தி​யா​வில் உள்ள அரசு மருத்​துவ கல்​லூரி​கள் மற்​றும் தனி​யார் மருத்​துவ கல்​லூரி​களில் வெளி​நாட்டு வாழ் இந்​தி​யர்​களுக்கு (என்​ஆர்ஐ) குறிப்​பிட்ட சதவீதம் இடம் ஒதுக்​கப்​படு​கிறது.

அதன்​படி ஆண்​டு​தோறும் எம்​பிபிஸ் மாணவர்​கள் சேர்க்கை நடை​பெறுகிறது. இந்​நிலை​யில், போலி ஆவணங்​கள் மூலம் என்​ஆர்ஐ ஒதுக்​கீட்டு இடங்​களில் வேறு மாணவர்​களை சேர்த்​திருப்​பது அமலாக்​கத் துறை விசா​ரணை​யில் கண்​டு​பிடிக்கப்பட்டுள்ளது.

இந்​தி​யா​வில் தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​களில் எம்​பிபிஎஸ் படிப்​பில் சேரும் என்​ஆர்ஐ மாணவர்​கள் பலர் உண்​மை​யில் வெளி நாட்​டினர் இல்லை என்று பல்​வேறு நாடு​களில் உள்ள இந்​திய தூதரகங்​கள், சம்​பந்​தப்​பட்ட நாடு​களின் அதி​காரி​கள் மத்​திய வெளியுறவுத் துறைக்கு தகவல் அனுப்பி உள்​ளனர்.

இதையடுத்து மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சகம் மற்​றும் வெளி​நாடு​களில் உள்ள இந்​திய தூதரகங்​களின் உதவி​யுடன் அமலாக்​கத் துறை அதி​காரி​கள், இதுகுறித்து தீவிர விசா​ரணை நடத்​தினர். அப்​போது, போலி ஆவணங்​கள் மூலம் என்​ஆர்ஐ ஒதுக்​கீட்​டுக்​கான 18 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மாணவர் சேர்க்​கை​யில் மோசடி நடந்​துள்​ளது தெரிய வந்​துள்​ளது.

சில தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​கள் ஏஜென்​டு​களுக்கு பணம் கொடுத்து போலி ஆவணங்​கள் தயார் செய்​துள்​ளனர். அதன்​படி, என்​ஆர்ஐ மாணவர்​கள், அவர்​களு​டைய குடும்ப பின்​புலம் போன்​றவை குறித்து போலி​யாக ஆவணங்​கள் தயார் செய்​துள்​ளனர். குறிப்​பாக தூதரக ஆவணங்​கள், என்​ஆர்ஐ என்​ப​தற்​கான ஆவணங்​களை ஏஜென்​டு​கள் தயார் செய்​துள்​ளனர்.

இந்த மோசடி​யில் உண்​மை​யான என்​ஆர்ஐ மாணவர்​களும் ஈடு​பட்​டுள்​ளனர். சட்​டப்​படி இந்​தி​யா​வில் என்​ஆர்ஐ ஒதுக்​கீட்​டின் கீழ் எம்பிபிஎஸ் படிப்​பில் சேரும் மாணவருக்​கு, என்​ஆர்ஐ உறவினர்​தான் கட்​ட​ணம் செலுத்த வேண்​டும். ஆனால், என்​ஆர்ஐ மாணவர் சேர்க்​கை​யில் என்​ஆர்ஐ குடும்​பத்​தினர் கட்​ட​ணம் செலுத்​த​வில்லை என்​பதும் உள்​ளூரில் இருந்தே பணம் செலுத்​தப்​பட்​டுள்​ளது என்​பதும் தெரிய வந்​துள்​ளது.

இது​போல் என்​ஆர்ஐ ஒதுக்​கீட்டு எம்​பிபிஎஸ் சேர்க்​கை​யில் மோசடி நடை​பெறு​வது குறித்து கடந்த மாதமே மத்​திய வெளி​யுறவுத் துறை ஆதா​ரப்​பூர்​வ​மாக மேற்கு வங்​கம் மற்​றும் ஒடிசா அரசுக்கு தகவல் தெரி​வித்​துள்​ளது. தகு​தி​யற்ற மாணவர்​கள் மீது நடவடிக்கை எடுக்க அப்​போது அறி​வுறுத்​தப்​பட்​டது.

எனினும், மேற்கு வங்க, ஒடிசா மாநில அரசு அதி​காரி​கள் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்லை என்று அமலாக்​கத் துறை தெரி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக மேற்கு வங்​கத்​தில் உள்ள ஒரு தனி​யார் கல்​லூரி வங்​கி​யில் வைத்​துள்ள வைப்பு தொகை ரூ.6.42 கோடியை முடக்​கி​யுள்​ளது. இதே​போல் முறை​கேட்​டில் ஈடு​பட்ட சில தனி​யார் கல்​லூரி​களின்​ ரூ.12.33 கோடியை அமலாக்​கத்​ துறை ​முடக்​கி​யுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.