பெங்களூருவில் கனமழை, வெள்ளம்: நெரிசலால் வாகன ஓட்டிகள் பாதிப்பு

பெங்​களூரு: பெங்​களூரு​வில் கடந்த சில தினங்​களாக மாலை மற்​றும் இரவு நேரங்​களில் கனமழை பெய்து வரு​கிறது. நேற்று முன்​தினம் இரவு கொட்​டித் தீர்த்த கனமழை​யால் ஹென்​னூர் சாலை, ஓசூர் சாலை, மைசூரு சாலை ஆகிய​வற்​றில் மழை நீர் வெள்​ளம் போல‌ கரை புரண்​டோடியது.

நேற்​றும் மாலை 5 மணிக்கு மீண்​டும் தொடங்​கிய கன‌மழை 7.30 மணி வரை ஓயாமல் பெய்​தது. இதனால் ஹென்​னூர், பைரத்​தி, கிருஷ்ண​ராஜாபுரம், கோரமங்​களா உள்​ளிட்ட இடங்​களில் உள்ள சாலைகளில் வெள்​ளம் பெருக்​கெடுத்​தது. இதனால் பெரும்​பாலான இடங்​களில் கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. மாலை​யில் அலு​வல​கம் சென்று வீடு திரும்​பிய வாகன ஓட்​டிகள் கடும் சிரமத்​துக்கு ஆளாகினர்.

சில்க் போர்ட், சாந்தி நகர், எலஹங்​கா, ஹொர்​மாவு உள்​ளிட்ட இடங்​களில் தாழ்​வான பகு​தி​களில் உள்ள‌ வீடு​கள், அடுக்​கு​மாடி குடிருப்​பு​களுக்​குள் மழை நீர் உள்ளே புகுந்​தது. இதனால் வீடு​களில் இருந்த பொருட்​களும், அடுக்​கு​மாடி குடி​யிருப்​பின் பார்க்​கிங் பகு​தி​யில் நிறுத்​தப்​பட்​டிருந்த வாக​னங்​களும் நீரில் மூழ்​கின.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.