தீவிரவாதிகள், தேசவிரோத சக்திகளுடன் தொடர்பா? – தூத்துக்குடி உட்பட நாடு முழுவதும் 22 இடங்களில் என்ஐஏ சோதனை

புதுடெல்லி/ தூத்துக்குடி: தீவிரவாத நெட்வொர்க் மற்றும் தேசவிரோத சக்திகளுடன் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தமிழகத்தில் தூத்துக்குடி உட்பட நாடு முழுவதும் 5 மாநிலங்களில் மொத்தம் 22 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று தீவிர சோதனை நடத்தினர்.

தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி, ஆள் சேர்ப்பு மற்றும் ஸ்லீப்பர் செல்களுக்கு எதிராக என்ஐஏ தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டனர். தீவிரவாத இயக்கங்களில் சேர்க்க, இளைஞர்களை இவர்கள் மூளைச் சலவை செய்ய முயற்சி செய்ததும் தெரியவந்தது.

இந்நிலையில், இதுபோன்ற தேசவிரோத சக்திகள், தீவிரவாதிகள் உடனான தொடர்பு குறித்து தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் மொத்தம் 22 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

தூத்துக்குடியில் விசாரணை: அந்த வகையில், தூத்​துக்​குடி​யில் தங்​கி​யிருந்த பிஹார் இளைஞரிடம் என்ஐஏ அதி​காரி​கள் சுமார் ஒரு மணி நேரம் விசா​ரணை நடத்​தினர். அதுபற்றிய விவரம்: செங்​கல்​பட்டு மாவட்​டத்தில் தீவிர​வாத அமைப்​புடன் தொடர்​பு உடைய பிஹார் மாநிலத்​தை சேர்ந்த முகமது (22) என்ற இளைஞர் சமீபத்தில் கைது செய்​யப்​பட்​டார். அவரிடம் என்ஐஏ அதி​காரி​கள் நடத்​திய விசா​ரணை​யில், அவர் பிஹார் மாநிலத்​தை சேர்ந்த முஸ்​பிக் ஆலம் என்​பவருடன் செல்​போனில் அடிக்​கடி பேசி​யது தெரிய​வந்​தது.

மேலும், தூத்​துக்​குடி அருகே சிலு​வைப்​பட்டி பகு​தி​யில் தமிழ்​நாடு குடிசை​மாற்று வாரி​யம் சார்​பில் கட்​டப்​பட்டு வரும் அடுக்​கு​மாடி குடி​யிருப்பு கட்​டிடத்​துக்கு பெயின்ட் அடிக்​கும் பணிக்​காக பிஹாரில் இருந்து முஸ்​பிக் ஆலம் கடந்த ஒரு மாதத்​துக்கு முன்பு வந்​தது தெரிய​வந்​தது. இதையடுத்து, 2 என்ஐஏ அதி​காரி​கள் நேற்று காலை 8.30 மணி அளவில் சிலு​வைப்​பட்டி வந்​தனர். அங்கு ஒரு அறை​யில் முஸ்​பிக் ஆலம் உட்பட 7 பேர் தங்​கி​யிருந்​தனர். முஸ்​பிக் ஆலம் மற்​றும் அவருக்கு நெருக்​க​மான நண்​பர்​கள் 3 பேரிடம் என்ஐஏ அதி​காரி​கள் தீவிர விசா​ரணை நடத்​தினர்.

முஸ்​பிக் ஆலத்​தின் செல்​போனை ஆய்வு செய்​தனர். பின்​னர், முஸ்​பிக் ஆலம் உட்பட 4 பேரை​யும் என்ஐஏ அதி​காரி​கள் தாள​முத்​துநகர் காவல் நிலை​யத்​தில் ஒப்​படைத்​து​விட்டு சென்​றனர். போலீ​ஸாரும் அவர்களிடம் தீவிர விசா​ரணை நடத்தி முழு விவரங்​களை கேட்​டறிந்​தனர். மத்​திய உளவுப் பிரிவு அதி​காரி​களும் (ஐபி) அவர்களிடம் விசா​ரணை நடத்​தினர். பின்​னர் அவர்​கள் திருப்பி அனுப்பி வைக்​கப்​பட்​டனர்​.

இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறியதாவது: ஜம்மு காஷ்மீரில் 9 இடங்கள், பிஹாரில் 8 இடங்கள், உத்தர பிரதேசத்தில் 2 இடங்கள், கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழகத்தில் தலா ஒரு இடம் என மொத்தம் 22 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் தனித்தனி என்ஐஏ குழுக்கள் ஒரே நேரத்தில் இந்த சோதனையில் ஈடுபட்டன.

தேசவிரோத சக்திகள் மற்றும் தீவிரவாத நெட்வொர்க் உடன்தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள் மற்றும் தொடர்புடைய இடங்களில் அந்தந்த மாநில காவல் துறையுடன் இணைந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி அளிப்பது, இளைஞர்களுக்கு மூளைச் சலவை செய்து ஆள்சேர்ப்பு நடத்துவது, எல்லைக்கு அப்பால் இருந்தபடி தீவிரவாத நடவடிக்கைகளை செயல்படுத்துபவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது ஆகியவற்றில் யாராவது ஈடுபடுகின்றனரா என்பதற்கான ஆதாரங்களை திரட்டுவதே இந்த சோதனையின் நோக்கம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.