திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை: ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் குற்றச்சாட்டு

சென்னை: ​தி​முக ஆட்​சிக்கு வந்த நான்​கரை ஆண்​டு​கள் கடந்​து​விட்ட நிலை​யிலும், எங்​களது கோரிக்​கைகளை தமிழக அரசு நிறைவேற்றவில்லை என ஓய்வு பெற்ற சத்​துணவு, அங்​கன்​வாடி ஓய்​வூ​தி​யர் சங்​கம் குற்​றம் சாட்டி உள்​ளது. குறைந்​த​பட்ச ஓய்​வூ​தி​யத்தை உயர்த்தி வழங்க வேண்​டும் என்​பது உட்பட 10 அம்ச கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, தமிழ்​நாடு அனைத்து சத்​துணவு, அங்​கன்​வாடி ஓய்​வூ​தி​யர் சங்​கம் சார்​பில் கவன ஈர்ப்பு ஆர்ப்​பாட்​டம், சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. சங்​கத்​தின் மாநில தலை​வர் கே.பழனி​சாமி தலைமை வகித்​தார். இதில், 200-க்​கும் மேற்​பட்ட ஓய்வு பெற்ற சத்​துணவு, அங்​கன்​வாடி ஊழியர்​கள் பங்​கேற்​றனர்.

போராட்​டம் தொடர்​பாக, சங்​கத்​தின் மாநில பொருளாளர் என்​. ஜெயச்​சந்​திரன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கடந்த 2021-ம் ஆண்டு நடை​பெற்ற சட்​டப்​பேரவை தேர்​தலின் போது, சத்​துணவு, அங்​கன்​வாடி ஊழியர்​களை அரசு பணி​யாளர்​களாக்கி கால​முறை ஊதி​யம் வழங்​கப்​படும். அவர்​களுக்கு குறைந்​த​பட்ச ஓய்​வூ​தி​ய​மும், பணிக்​கொடை​யும் வழங்​கப்​படும் என திமுக தனது தேர்​தல் அறிக்​கை​யில் அறி​வித்​தது. ஆனால், ஆட்​சிக்கு வந்த நான்​கரை ஆண்டு கடந்​து​விட்ட நிலை​யிலும், எங்​களது கோரிக்​கை​களை தமிழக அரசு நிறைவேற்றவில்லை. இதனால், இது​வரை எங்​களுக்கு ரூ.2 ஆயிரம் மட்​டுமே ஓய்​வூ​தி​ய​மாக வழங்​கப்​பட்டு வரு​கிறது.

தமிழ்​நாடு அரசு ஊழியர் சங்​கத்​தின் சார்​பில், 2021-ல் நடை​பெற்ற மாநில மாநாடு, அதைத் தொடர்ந்​து, 2022-ல் நடந்த ஜாக்டோ – ஜியோ மாநில மாநாடு ஆகிய​வற்​றுக்கு வருகை தந்த தமிழக முதல்​வர், தமிழக அரசின் நிதி நிலைமை சரி​யான பின்​னர் அனைத்து கோரிக்​கைகளும் நிறைவேற்​றப்​படும் என உரை​யாற்​றி​னார். ஆனால், அந்த உரை வெறும் வீர உரை​யாகவே இருக்​கிறதே தவிர, இது​வரை செயல்​வடிவம் பெற​வில்​லை.

எனவே, 40 ஆண்​டு​களுக்கு மேலாக பணி​யாற்றி ஓய்​வு​பெற்ற சத்​துணவு, அங்​கன்​வாடி ஓய்​வூ​தி​யர்​களுக்​கு, குறைந்​த​பட்ச ஓய்​வூ​தி​ய​மாக ரூ.7,850 வழங்க வேண்​டும். விலை​வாசி உயர்வை ஈடு செய்ய அகவிலைப்​படி வழங்க வேண்​டும். குடும்ப ஓய்​வூ​தி​யம், பண்​டிகை முன்​பணம், மருத்​து​வபடி, மருத்​து​வக் காப்​பீடு, குடும்​பநல நிதி போன்​றவற்றை வழங்க வேண்​டும் உள்​ளிட்ட 10 அம்ச கோரிக்​கைகளை வலி​யுறுத்தி இந்த போ​ராட்​டம் நடை​பெற்று வரு​கிறது. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.