சென்னை,
துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இந்தியாவின் பிளையிங் டிஸ்க் இந்தியா மாஸ்டர்ஸ் மகளிர் அணி போர்ச்சுகலில் நடக்கவுள்ள World Beach Ultimate Challenge போட்டியில் பங்கேற்கவுள்ளது.
இந்த அணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டு வீராங்கனையரின் பயணம் – தங்குமிடம் – போட்டிக்கட்டணம் உள்ளிட்ட செலவினங்களுக்காக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையில் இருந்து ரூ.6 லட்சத்துக்கா காசோலையை இன்று வழங்கினோம். நம் வீராங்கனையர் இப்போட்டியில் சாதனைப் படைக்க வாழ்த்தினோம்.என தெரிவிக்கப்பட்டுள்ளது .
Related Tags :