சென்னை: நடப்பாண்டில் வீராணம் ஏரி 6-வது முறையாக நிரம்பி உள்ளது. இது அப்பகுதி விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்னும் தொடங்காத நிலையில், தென்மேற்கு பருவமழை மற்றும் மேலடுக்கு சுழற்றி, வளிமண்டல சுழற்றி போன்ற காரணங்களால், பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அணைகள், ஏரிகள், குளங்கள் நீர் நிரைந்து காணப்படுகிறது. மேலும், கர்நாடகாவில் பெய்து வந்த மழை காரணமாக, மேட்டூர் அணையும் நடப்பாண்டு 6 முறை நிரம்பியது. […]
