உ.பி.யில் இலவச மருத்துவ முகாம்: முதல்வர் ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்

புதுடெல்லி: உ.பி.​யின் 75 மாவட்​டங்​களி​லும் 20,324 மருத்​துவ முகாம்​கள் ஒரே சமயத்​தில் தொடங்​கப்​பட்​டுள்​ளன. இதை முதல்வர் ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். வரும் அக்​டோபர் 2 வரை இரண்டு வாரங்​களுக்கு இந்த முகாம்​கள் நடை​பெற உள்​ளன. இவற்​றில் உடல்​நலப் பரிசோதனை மட்​டுமின்​றி, ரத்​தப் பரிசோதனை உள்​ளிட்ட பிற பரிசோதனை​கள் மற்​றும் தீவிர நோய்​களுக்​கான சிகிச்​சை​யும் அளிக்​கப்பட உள்​ளது.

இந்த முகாம்களில் பெண்​கள் மற்​றும் குழந்​தைகளுக்கு முக்​கி​யத்​து​வம் அளிக்க முதல்​வர் யோகி உத்​தர​விட்​டுள்​ளார். இந்த முகாமின் ஒரு பகு​தி​யாக 507 ரத்த தான முகாம்​களுக்​கும் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. தொடக்க விழா​வில் முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் பேசி​ய​தாவது: இந்த முகாம்​களில் கர்ப்​பிணி​களுக்கு பிரசவத்​திற்கு முந்​தைய பராமரிப்​பு, குழந்​தைகளுக்கு தடுப்​பூசி மற்​றும் ஊட்​டச்​சத்து குறை​பாட்டை நீக்குதல் ஆகிய​வற்றில் கவனம் செலுத்த உத்​தர​விட்​டுள்​ளேன்.

பெண் குழந்​தைகளை காப்​போம் திட்​டம், பெண்​களுக்கு மகப்​பேறு சலுகைள் வழங்​கும் மாத்ரு வந்​தனா திட்​டம், பெண் சக்திவந்​தன் சட்​டம் போன்ற பிரதமர் மோடி​யின் முன்​முயற்​சிகள் இந்​தி​யா​வுக்கு புதிய அடை​யாளத்தை அளித்​துள்ளன. எங்​கள் ஆட்​சி​யில் கடந்த 8 ஆண்​டு​களில் 41 புதிய மருத்​து​வக் கல்​லூரி​கள் கட்​டப்​பட்​டுள்​ளன. சமீபத்​தில் அமே​தி​யிலும் ஒரு மருத்​து​வக் கல்​லூரி திறக்​கப்​பட்​டது. உ.பி.யில் குழந்தை இறப்பு விகிதம் குறைந்​துள்​ளது. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.