மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் செல்போன் செயலி மூலம் மாணவியை ரகசியமாக கண்காணித்த முகமது அப்ரித் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் மேலும் சில மாணவிகளை இதுபோல கண்காணித்து வந்தது தெரிய வந்துள்ளது. இது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இளம்பெண்கள், பொதுமக்கள் தங்களது மொபைல் போனை தெரியாதவர்களிடம் கொடுப்தையும், தேவையற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்வதிலும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள இன்டர்நெட் மையத்தில் பணியாற்றி வருபவர் பெரம்பூர் அகரவல்லம் […]
