நியூயார்க்,
வனவிலங்குகள் என்றால் அவை எப்போது வேண்டுமென்றாலும் மூர்க்கத்தனத்துடன் தாக்க கூடிய தன்மை கொண்டவையாக இருக்கும். அவற்றில் கொடிய விலங்குகளான சிங்கம், புலி, கரடி அடங்கும். நீர்வாழ் விலங்குகளில் முதலை, சுறா போன்றவை இரையை நொடியில் வீழ்த்த கூடியவை.
இந்நிலையில், அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் வாலிபர் ஒருவர் ஆற்றில் படகில் செல்லும்போது, கருப்பு நிற பெரிய முதலையை எதிர்கொள்கிறார். அது அவரை நோக்கி அருகே சென்றதும், பயப்படாமல் அதன் வாய் பகுதியில் அந்த இளைஞர் முத்தமிடுகிறார்.
ஆபத்து நிறைந்த இந்த செயலை அச்சமின்றி அவர் செய்த காட்சிகள் திகிலூட்டுகின்றன. இதன் பின்னர், அது சாப்பிடுவதற்கு வெள்ளை நிற இனிப்பு கட்டிகளை கொடுக்கிறார். அதனை சாப்பிட்டதும் அது அமைதியாகி விடுகிறது. அதன் வாய் பகுதியை பிடித்தும், கால் மற்றும் வால் பகுதியை பிடித்தும் விடுகிறார். இதனால், மசாஜ் செய்வது போன்று அது உணர்ந்துள்ளது.
இதுபற்றிய வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வெளியாகி உள்ளது. அதனை 2.28 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். எனினும், அது ஆபத்திற்குரிய செயல். இதனை செய்ய வேண்டாம். இதுபோன்ற செயல்களை ஊக்குவிக்க வேண்டாம். இதனை தவிர்க்க வேண்டும் என்று சிலர் எச்சரித்து விமர்சனங்களையும் வெளியிட்டு உள்ளனர்.