தீபாவளிக்கு முன்பு முன்பதிவில்லா ரயில் டிக்கெட் ஆன்லைனில் பெறுவது எப்படி?

Diwali train ticket Booking : பண்டிகைக் காலங்களில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணிக்க ரயில்வேயை அதிகம் நம்பியுள்ளனர். இந்த நேரத்தில் ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுக்க நீண்ட வரிசையில் காத்திருப்பது வழக்கமான ஒன்று. ஆனால், இந்திய ரயில்வேயால் அறிமுகப்படுத்தப்பட்ட UTS (Unreserved Ticketing System) செயலி மூலம், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை இனி எளிதாக உங்கள் செல்போனில் பெறலாம். இந்தச் செயலி, தமிழ்நாட்டுக்குள் செல்பவர்களுக்கும், வெளிமாநிலப் பயணிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

Add Zee News as a Preferred Source

UTS செயலியின் பயன்கள்

வரிசையில் நிற்கத் தேவையில்லை: ரயில் நிலையத்தில் நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிர்த்து, எங்கிருந்தும் உங்கள் டிக்கெட்டைப் பதிவு செய்யலாம்.

பல்வேறு வகையான டிக்கெட்டுகள்: இந்தச் செயலி மூலம் பயணிகள் ரயில்கள், உள்ளூர் ரயில்கள் மற்றும் பொதுப் பெட்டிகளுக்கான டிக்கெட்டுகளுடன், பிளாட்பாரம் டிக்கெட் மற்றும் சீசன் டிக்கெட்டுகளையும் வாங்கலாம்.

டிஜிட்டல் டிக்கெட்: டிக்கெட்டை அச்சிடத் தேவையில்லை. உங்கள் செல்போனில் உள்ள டிஜிட்டல் டிக்கெட்டைக் காட்டினால் போதும்.

Android மற்றும் iOS ஆதரவு: இந்தச் செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐபோன் என இரண்டு வகை மொபைல்களுக்கும் கிடைக்கிறது.

UTS செயலியில் டிக்கெட் புக் செய்யும் முறைகள்

முதலில், உங்கள் செல்போனில் UTS செயலியைப் பதிவிறக்கம் செய்து, உங்கள் மொபைல் எண் மற்றும் பிற விவரங்களைக் கொடுத்துப் பதிவு செய்யவும்.

ஒரு கடவுச்சொல்லை உருவாக்கி, உங்கள் உள்நுழைவு ஐடி (Login ID) மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி செயலியில் உள்நுழையவும்.

“Book Ticket” என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் பயணிக்க வேண்டிய இடத்தின் விவரங்களை (எங்கிருந்து எங்கு செல்கிறீர்கள்) நிரப்பவும்.

கட்டணத்தைச் செலுத்தியவுடன், உங்கள் கணக்கிற்கு டிஜிட்டல் டிக்கெட் வந்துவிடும்.

பிளாட்பாரம் டிக்கெட் முன்பதிவு

ரயில் நிலையங்களில், பிளாட்பாரத்திற்குள் செல்ல விரும்பும் பயணிகளுக்கான டிக்கெட்டுகளையும் UTS செயலி மூலம் முன்பதிவு செய்யலாம். இது, ரயில் பயணிகளை வழியனுப்பவோ அல்லது அவர்களை அழைத்துச் செல்லவோ செல்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பிளாட்பாரம் டிக்கெட் புக் செய்யும் வழிமுறைகள்

உங்கள் செல்போனில் UTS செயலியைத் திறந்து, லாகின் செய்யவும்

“Book Ticket” விருப்பத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு, அதில் உள்ள “Platform Ticket” என்ற விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.

நீங்கள் எந்த ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் டிக்கெட் வாங்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

பிறகு, நீங்கள் விரும்பும் டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை உள்ளிட்டு, கட்டணத்தைச் செலுத்தவும்.

கட்டணம் செலுத்தியவுடன், உங்கள் செல்போனுக்கு டிஜிட்டல் பிளாட்பாரம் டிக்கெட் வரும். இந்த டிக்கெட்டைக் கொண்டு நீங்கள் பிளாட்பாரத்திற்குள் நுழையலாம்.

தமிழ்நாட்டு பயணிகளுக்கு

தமிழ்நாட்டிற்குள் பயணிகள் ரயில்கள் அல்லது உள்ளூர் ரயில்களில் பயணம் செய்ய, இந்தச் செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக, சென்னையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு அல்லது வேலூர் போன்ற இடங்களுக்குப் பயணிக்க, ரயில் நிலையத்திற்குச் செல்லும் முன்பே உங்கள் டிக்கெட்டைப் பதிவு செய்து கொள்ளலாம். இது, நேரத்தைச் சேமிக்க உதவுவதுடன், கடைசி நிமிட அவசரத்தையும் தவிர்க்க உதவும்.

வெளிமாநிலப் பயணிகளுக்கு

தமிழ்நாட்டிலிருந்து கேரளா, கர்நாடகா, பீகார், உத்தரப்பிரதேசம் அல்லது ஆந்திரா போன்ற மாநிலங்களுக்குப் பொதுப் பெட்டிகளில் பயணிக்க விரும்பினால், இந்தச் செயலி வழியாகவே முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டைப் பதிவு செய்யலாம். அதாவது, முக்கிய நகரங்களுக்குச் செல்லும் ரயில்களில், முன்பதிவில்லா பெட்டிகளுக்கான டிக்கெட்டுகளையும் இந்தச் செயலி மூலம் பெறலாம். பண்டிகை காலங்களில் கடைசி நேரங்களில் ரயில் நிலையங்கள் செல்லும் பயணிகள் டிக்கெட் கவுண்டருக்கு செல்லாமல் நேராக ரயிலுக்கு சென்று எளிதாகப் பயணம் செய்ய உதவும்.

About the Author


S.Karthikeyan

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.