பாரிஸ்,
கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பலோன் டி ‘ஓர் விருதை சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கு வருடந்தோறும் பிபா வழங்கி வருகிறது. 1956ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் 60 (30 ஆண் மற்றும் 30 பெண்) பேர் இடம் பெற்றிருந்தனர்.. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பலோன் டி’ஓர் விருதை 28 வயதான பிரான்ஸ் வீரர் டெம்பலே வென்றார். கிளப் போட்டிகளில் பிஎஸ்ஜி அணிக்காக 2024-25 சீசனில் சிறந்த ஆட்டத்தை டெம்பலே வெளிப்படுத்தினார்.
இந்த நிலையில் பலோன் டி’ஓர் விருதை வென்ற டெம்பலேவுக்கு, கால்பந்து ஜாம்பவானும், அதிக முறை(8) பலோன் டி’ஓர் விருதை வென்றவருமான மெஸ்சி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மெஸ்சி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில்,
அருமை வாழ்த்துகள் டெம்பலே. உங்களுக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் இந்த விருதுக்கு தகுதியானவர். என தெரிவித்துள்ளார்.