லக்னோ,
தன்னிறைவு இந்தியா மற்றும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பது தொடர்பாக நாடு தழுவிய அளவில் பாஜக சார்பில் கருத்தரங்கு கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் உத்தரபிரதேசத்தின் லக்னோவில் இந்த கருத்தரங்கு இன்று நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவரும் உ.பி. முதல்-மந்திரியுமான யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது,
கி.பி. 1100ம் ஆண்டுவாக்கில் இஸ்லாம் இந்தியாவை தாக்கியபோது இந்து மதத்தினரின் மக்கள் தொகை 60 கோடியாக இருந்தது. ஆனால், 1947ம் ஆண்டு நாடு சுதந்திரம் பெற்றபோது இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிந்தது. 900 ஆண்டுகளில் இந்து மதத்தினரின் மக்கள் தொகை உயர்ந்திருக்க வேண்டும். ஆனால், 60 கோடியில் இருந்த மக்கள் தொகை 30 கோடியாக சரிந்துள்ளது. இந்து மதத்தினரின் மக்கள் தொகை இந்தியா மீது படையெடுத்தவர்களின் அட்டூழியங்களால் குறைந்தது. அதுமட்டுமின்றி வறுமை, நோய், பிற சித்ரவதைகளால் இந்து மதத்தினரின் மக்கள் தொகை குறைந்தது. அந்நிய அடிமைத்தனம் இதைத்தான் செய்தது. அதுதான் இந்த நாட்டில் நடந்தது.
என்றார்.