நலத் திட்டங்கள் மக்களை சென்றடைய அரசு அலுவலர்கள் பங்களிப்பு மிகவும் முக்கியம்: உதயநிதி அறிவுறுத்தல்

விருதுநகர்: ​‘முதல்​வர் எவ்​வளவோ திட்​டங்​களை தீட்​டி​னாலும், அவை மக்​களைச் சென்​றடைய அலு​வலர்​களின் பங்​களிப்பு மிக​வும் முக்​கி​யம்’ என்று துணை முதல்​வர் உதயநிதி கூறி​னார்.

விருதுநகர் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கத்​தில் நேற்று அனைத்​துத் துறை அலு​வலர்​கள் பங்​கேற்ற கலந்​தாய்​வுக் கூட்​டத்​தில் துணை முதல்​வர் பேசி​ய​தாவது: மக்​களை தேடிச் சென்று மனுக்​களை பெற்​று, அவற்​றுக்கு விரை​வாக தீர்​வு​களை வழங்க வேண்​டும். பொது​மக்​களை ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்ட முகாம்​களுக்கு வரவழைக்​கும் வகை​யில், உரிய விழிப்​புணர்வை ஏற்​படுத்த வேண்​டும். கலைஞர் விளை​யாட்டு உபகரணங்​களை அனைத்து ஊராட்​சிகளுக்​கும் விநி​யோகித்​து, அவை பயன்​படுத்​து​வதை உறு​தி​செய்ய துணை வட்​டார வளர்ச்சி அலு​வலர்​களை பொறுப்​பாளர்​களாக நியமிக்க வேண்​டும்.

முதல்​வர் எத்​தனையோ திட்​டங்​களை தீட்​டி​னாலும், அரசு அலு​வலர்​கள் சிறப்​பாகச் செயல்​பட்​டால்​தான், அந்த திட்​டங்​கள் பொது​மக்​களை சென்​றடை​யும். அரசு அலு​வலர்​கள் அரசுக்​கும், மக்​களுக்​கும் பால​மாக செயல்​படு​வது அவசி​யம். இவ்​வாறு அவர் பேசி​னார். பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறும்​போது, “அரசு திட்​டப்பணி​களில் தொய்​விருந்​தால் அதற்​கான காரணத்தை ஆராய்ந்​து, அவற்றை சரி செய்​வது குறித்து அதி​காரி​களுக்கு அறி​வுரை வழங்​கினேன். அனைத்து திட்​டங்​களை​யும் உரிய காலத்​தில் நிறைவேற்ற வேண்​டுமென அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது” என்​றார்.

தொடர்ந்​து, விருதுநகர் அரசு மருத்​து​வக் கல்​லூரி கலை​யரங்​கில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் 837 பயனாளி​களுக்கு ரூ.10.84 கோடி மதிப்​பிலான நலத்​திட்ட உதவி​களை உதயநிதி வழங்​கி​னார். மேலும், ரூ.124 கோடி​யில் பல்​வேறு புதிய திட்​டப் பணிகளுக்கு அடிக்​கல் நாட்​டி​யும், ரூ.25.89 கோடி​யில் முடிவுற்ற திட்​டப் பணி​களைத் திறந்​தும் வைத்​தார். இந்த நிகழ்ச்​சிகளில், அமைச்​சர்​கள் சாத்​தூர் ராமச்​சந்​திரன், தங்​கம் தென்​னரசு, மாவட்ட ஆட்​சி​யர் சுகபுத்​ரா, ராம​நாத​புரம் எம்​.பி. நவாஸ்​க​னி, காவல் கண்​காணிப்​பாளர் கண்​ணன், எம்​எல்​ஏக்​கள் சீனி​வாசன், அசோகன், தங்​கப்​பாண்​டியன், சிவ​காசி மேயர் சங்​கீதா உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.