துபாய்,
17வது ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாய், அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 4 சுற்றுக்குள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் நுழைந்துள்ளன. இந்த சுற்றில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இந்நிலையில், ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றில் இன்று துபாயில் நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் இந்தியா, வங்காளதேசம் மோதி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, சுப்மன் கில் களமிறங்கியுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி 4 ஓவர்கள் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 38 ரன்கள் சேர்த்துள்ளது. கில் 22 ரன்னிலும், அபிஷேக் 15 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.