ஹீரோவின் 160சிசி சந்தையில் கிடைக்கின்ற எக்ஸ்ட்ரீம் 160R பைக்கில் புதுப்பிக்கப்பட்ட வசதிகளுடன் க்ரூஸ் கண்ட்ரோல், ரைடிங் மோடு பெற்ற மாடல் அடுத்த சில வாரங்களுக்குள் சந்தைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சமீபத்தில் வெளியான 125சிசி கிளாமர் எக்ஸில் க்ரூஸ் கண்ட்ரோலை வெளியிட்ட ஹீரோ நிறுவனம் படிப்படியாக பல்வேறு மாடல்களில் கூடுதல் வேரியண்டுகளில் வெளியிட திட்டமிட்டிருக்கின்றது.
2026 Hero Xtreme 160R Combat
அடிப்படையான மெக்கானிக்கல் அமைப்புகளில் சேஸிஸ், என்ஜின், சஸ்பென்ஷன் மற்றபடி பிரேக்கிங் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லாமல், புதுப்பிக்கப்பட்ட எக்ஸ்ட்ரீம் 160ஆர் டிசைனை பெறுவதுடன் பிரீமியம் எக்ஸ்ட்ரீம் 250ஆர் பைக்கில் உள்ள எல்இடி ஹெட்லைட் பெறுவது உறுதி செய்யப்பட்டு, கலர் LCD கிளஸ்ட்டர், க்ரூஸ் கண்ட்ரோல் பெறுவதுடன் AERA டெக் நுட்பத்துடன் சார்ந்தவற்ற வசதிகளுடன் ரைடிங் மோடு ஆனது ஈக்கோ, ரோடு, ரெயின் மற்றும் ஸ்போர்ட் பெறக்கூடும்.
என்ஜின் ஆப்ஷனில் தொடர்ந்து 163.2cc ஏர்-ஆயில் கூல்டூ என்ஜின் அதிகபட்சமாக 8500rpm-ல் 16.9 hp பவர் மற்றும் 6500rpm-ல் 14.5 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.
முன்புறத்தில் கோல்டன் நிற அப்சைடு டவுன் ஃபோர்க் பெற்று பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனுடன், டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் பெறக்கூடும்.
புதிய ஜிஎஸ்டி 2.0 வரி குறைப்பின்படி எக்ஸ்ட்ரீம் 160ஆர் ரூ.1.04 லட்சம் முதல் ரூ.1.29 லட்சத்தில் கிடைப்பதனால், வரவுள்ள காம்பேட் எடிசன் ரூ.1.35 லட்சத்தில் வரக்கூடும்.
இந்த பைக்கிற்கு போட்டியாக சந்தையில் அப்பாச்சி ஆர்டிஆர் 160 மற்றும் பல்சர் 160 வரிசை மேலும் ஜிக்ஸர் 155 போன்றவை உள்ளது.
image – youtube/Suraj Terang