ஜிஎஸ்டி புதிய வரிவிதிப்பு: பால் பொருட்கள் விலையை ஆவின் குறைக்க நடவடிக்கை எடுக்க பால் முகவர்கள் வலியுறுத்தல்

சென்னை: ஜிஎஸ்டி சீர்​திருத்​தத்​தின்​கீழ், பால் பொருட்​களின் விலையை குறைக்​காத ஆவின் நிர்​வாக அதி​காரி​கள் மீது நடவடிக்கை எடுக்​கக் கோரி, ஜிஎஸ்டி கூடு​தல் ஆணை​யரிடம் தமிழக பால் முகவர்​கள் நலச் சங்​கத்​தினர் புகார் மனு அளித்துள்ளனர்.

சென்னை நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள ஜிஎஸ்டி (கவுன்​சில்) அலு​வல​கத்​தில், ஜிஎஸ்டி கூடு​தல் ஆணை​யர் லோக​நாதன் ரெட்​டி​யிடம் தமிழக பால் முகவர்​கள் நலச்​சங்க தலை​வர் பொன்​னு​சாமி மற்​றும் சங்க நிர்​வாகி​கள் நேற்று புகார் மனு அளித்​தனர்.

அந்த மனு​வில் தெரி​வித்​துள்​ள​தாவது: ஜிஎஸ்டி சீர்​திருத்​தம் மூலம் யு.எச்​.டி பால் மற்​றும் பனீர் வகைகளுக்கு ஜிஎஸ்​டியி​லிருந்து விலக்கு அளிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும் நெய், வெண்​ணெய், சீஸ் உள்​ளிட்ட பால் பொருட்​களுக்​கான ஜிஎஸ்​டியை 12 சதவீதத்​திலிருந்து 5 சதவீதம் ஆகவும், ஐஸ்​கிரீம் வகைகளை 18 சதவீதத்​தில் இருந்து 5 சதவீத​மாக​வும் குறைத்து அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதையடுத்​து, ஜிஎஸ்டி குறைப்பு செப்​.22 முதல் அமலுக்கு வந்​துள்​ள​தால், பால் பொருட்​கள் உற்​பத்​தி​யில் ஈடு​பட்​டுள்ள அனைத்து தனி​யார் பால் நிறு​வனங்​களும், ஜிஎஸ்டி வரி குறைப்​பின் பலனை பொது​மக்​களுக்கு வழங்​கும் முயற்​சி​யில் ஈடு​பட்​டுள்​ளன. ஆனால் ஆவின் நிறு​வனம் தற்​போது வரை பால் பொருட்​களின் விலையை குறைக்​க​வில்​லை.

மேலும், முழு​மை​யான விலைப்​பட்​டியலை வெளிப்​படைத் தன்​மையோடு வெளி​யிட​வும் இல்​லை. விலையை முழு​மை​யாக குறைக்க வலி​யுறுத்​தினோம். ஆனால், ஆவின் நிர்​வாகமோ விலையை குறைக்க முன்​வர​வில்​லை.

எனவே, மத்​திய அரசும் ஜிஎஸ்டி கவுன்​சிலும் ஆவின் நிறு​வனம் மீது கடுமை​யான நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதுகுறித்​து, ஆவின் நிர்​வாகத்​துக்கு சம்​மன் அனுப்பி விசா​ரிப்​ப​தாக ஜிஎஸ்டி கூடு​தல் ஆணை​யர் உறுதி அளித்​துள்​ள​தாக பின்​னர் பொன்​னு​சாமி தெரி​வித்​தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.