இந்திய அணி வீரர் சஞ்சு சாம்சன் கடந்த சில காலங்களாக டி20 அணியில் தொடக்க வீரராக களமிறங்கி அசத்தி வந்தார். அவரது தொடக்க பேட்டிங் இந்திய அணி மிகவும் தேவைப்பட்டதாக இருந்தது. இந்த சூழலில், ஆசிய கோப்பை தொடரில் இந்திய பிளேயிங் 11ல் சுப்மன் கில் நுழைந்தார். அதன்பின் அவருக்கு தொடக்க வீரருக்கான இடம் கொடுக்கப்பட்ட நிலையில், சஞ்சு சாம்சன் கீழ் வரிசைக்கு தள்ளப்பட்டார். நேற்று (செப்டம்பர் 24) வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் அவர் களமிறக்கப்படவே இல்லை.
Add Zee News as a Preferred Source
இத்தொடரில் ஒரு முறை மட்டுமே ஒன் டவுனில் களமிறங்கினார். அதில் அவர் அரைசதம் அடித்து அசத்தினார். அப்படியும் அவருக்கென ஒரு நிலையான பேட்டிங் வரிசை ஒதுக்கப்படவில்லை. ரசிகர்கள் சஞ்சு சாம்சனை சரியாக பயன்படுத்த வேண்டும் என்றும் முதல் 3 வீரர்களில் அவரை கொண்டுவர வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சஞ்சு சாம்சனிடமே கேள்வி எழுப்பிய நிலையில், அவர் மிகவும் விரக்தியாக பதில் அளித்துள்ளார்.
வங்கதேச அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக சஞ்சு சாம்சனிடம் பேசிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர், நீங்கள் அடித்த மூன்று டி20 சதங்களுமே தொடக்க வீரராக அடித்ததுதான், அப்படி இருக்கையில், உங்களுக்கு எந்த பேட்டிங் வரிசை மிகவும் வசதியாக உள்ளது என கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த சஞ்சு சாம்சன், மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லாலை உதாரணமாக கூறி பதில் அளித்தார். “நான் ஹீரோவாக மட்டுமே இருக்க முடியாது; சூழ்நிலைக்கு ஏற்ப வில்லனாகவும் ஜோக்கராகவும் மாறிக் கொள்ள வேண்டும்” என்று பதிலளித்தார்.
சமீபத்தில் மோகன்லால், ஒரு பெரிய விருதை பெற்றார். அவர் கடந்த 30, 40 ஆண்டுகளாக நடித்து வருகிறார். நானும் கடந்த 10 ஆண்டுகளாக நாட்டுக்காக விளையாடி வருகிறேன். எனவே என்னால் எப்போதும் ஒரு ஹிரோவாக மட்டும் இருக்க முடியும் என்று சொல்ல முடியாது, ஒரு வில்லனாக, ஒரு ஜோக்கராக இருக்க வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடி ஆக வேண்டும். நான் டாப் 3ல் சிறப்பாக ஆடுவேன் என்று கூறிக்கொண்டே இருக்க முடியாது. இதையும் முயற்சி செய்து பார்ப்போமே. என்னால் ஏன் ஒரு நல்ல வில்லனாக இருக்க முடியாது என்று கூறினார்.
இந்திய அணியில் துணை கேப்டன் சுப்மன் கிலின் திரும்பியதால், சஞ்சு தொடக்க வீரராக வரமாட்டாரென உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஆடிய 4 போட்டிகளில் ஓமனுக்கு எதிராக 3-வது இடம், பாகிஸ்தானுக்கு எதிராக 5-வது இடம் வழங்கப்பட்ட அவர், வங்கதேசத்துக்கு எதிரான அணிக்கு 8-வது இடத்தில் பேட்டிங் செய்தார்.
இந்த நிலை அம்மை கிரிக்கெட் ரசிகர்களிடையே குழப்பத்தையும் விமர்சனத்தையும் உருவாக்கியது. இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர் ரியான் டென், “சஞ்சு 5-வது இடத்தில் சிறந்த முறையில் விளையாடுவார் என நம்புகிறேன்” என்று தெரிவித்தாலும், அடுத்த தினம் அவர் 8-வது இடம் கொடுக்கப்பட்டதால் நிர்வாகத்தின் திட்டங்களின் மீதான கேள்விகள் எழுந்துள்ளன.
About the Author
R Balaji