ஜார்க்கண்டில் 4 பெண்கள் உட்பட 10 மாவோயிஸ்ட்கள் சரண்

சாய்பாசா: ஜார்க்​கண்ட் மாநிலத்​தில் 4 பெண்​கள் உட்பட 10 மாவோ​யிஸ்ட்​கள் நேற்று போலீ​ஸார் முன்பு சரணடைந்​தனர். மாவோயிஸ்ட் ஆதிக்​கம் நிறைந்த மாநிலங்​களில் ஜார்க்​கண்​டும் ஒன்​று. இந்​நிலை​யில், மாவோ​யிஸ்ட் மற்​றும் நக்​சல் தீவிர​வாதத்தை 2026-ம் ஆண்டு மார்ச் மாதத்​துக்​குள் ஒழிக்க மத்​திய அரசு பல்​வேறு திட்​டங்​களை செயல்​படுத்தி வரு​கிறது.

இதன் ஒரு பகு​தி​யாக, மாவோ​யிஸ்ட்​கள் ஆயுதங்​களை துறந்து சரணடைய வேண்​டும் என சம்​பந்​தப்​பட்ட மாநில அரசுகள் வலியுறுத்தி உள்​ளன. சரணடை​யும் மாவோ​யிஸ்ட்​களுக்கு நிதி​யுத​வி​யுடன் வாழ்​வா​தா​ரத்​துக்​கான ஏற்​பாடு​கள் செய்​யப்​படும் என்றும் உறுதி அளித்​துள்​ளன.

இந்​நிலை​யில், ஜார்க்​கண்ட் மாநிலம் சாய்​பாசா நகரில், மாநில காவல் துறை தலை​வர் அனு​ராக் குப்​தா, மேற்கு சிங்​பும் மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் அமித் ரேணு மற்​றும் உயர் அதி​காரி​கள் முன்​னிலை​யில் 4 பெண்​கள் உட்பட 10 மாவோ​யிஸ்ட்​கள் ஆயுதங்​களை துறந்து நேற்று சரணடைந்​தனர். இவர்​கள் தடை செய்​யப்​பட்ட சிபிஐ (மாவோ​யிஸ்ட்) அமைப்​பைச் சேர்ந்​தவர்​கள் ஆவர். இவர்​கள் மீது இந்​திய தண்​டனை சட்​டம், வெடிபொருட்​கள் தடுப்பு சட்​டம் ஆகிய​வற்​றின் கீழ் பல்​வேறு வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ள​ன.

இதுகுறித்து காவல் துறை உயர் அதி​காரி ஒரு​வர் கூறும்​போது, “மாவோ​யிஸ்ட் அமைப்​பைச் சேர்ந்​தவர்​கள் தொடர்ந்து சரணடைந்து வரு​கின்​றனர். இதனால், மாநிலத்​தில் குறிப்​பாக மேற்கு சிங்​பும் மாவட்​டத்​தில் அந்த அமைப்பு பலவீனமடை​யும். கடந்த 2022-க்கு பிறகு மேற்கு சிங்​பும் மாவட்​டத்​தில் மாவோ​யிஸ்ட்​களுக்கு எதி​ராக நடந்த 9,631 சோதனை​யின்​போது 10 பேர் உயி​ரிழந்​தனர். 175 பேர் கைது செய்​யப்​பட்​டனர்​” என்​றார்​. சரணடைந்தவர்களில் ராந்தோ போய்பாய் (எ) கிரந்தி போய்பாய், சிபிஐ மாவோயிஸ்ட் அமைப்பின் கிழக்கு பிராந்தியத்தின் முக்கிய நிர்வாகி ஆவார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.