உடுமலை கறிக்கோழி நிறுவனத்தில் 3-வது நாளாக வருமான வரி சோதனை

உடுமலை: திருப்​பூர் மாவட்​டம் உடுமலை​யில் உள்ள கறிக்​கோழி நிறு​வனத்​தில் வரு​மான வரித்​துறை அதி​காரி​கள் 3-வது நாளாக நேற்​றும் சோதனை மேற்​கொண்​டனர். உடுமலை​யில் செயல்​பட்டு வரும் தனி​யார் கறிக்​கோழி நிறு​வனத்​துக்கு பல மாநிலங்​களில் கிளை அலு​வல​கங்​கள் உள்​ளன.

கடந்த 23-ம் தேதி உடுமலை​யில் உள்ள அலு​வல​கம், தீவன உற்​பத்தி ஆலை, கணப​தி​பாளை​யத்​தில் உள்ள இல்​லம் ஆகிய​வற்​றில் 20-க்​கும் மேற்​பட்ட வரு​மான வரி துறை அதி​காரி​கள் அடங்​கிய குழு​வினர் ஆய்​வைத் தொடங்​கினர். இந்​நிலை​யில், 3-வது நாளாக நேற்​றும் வரு​மான வரித் துறை அதி​காரி​கள் சோதனை மேற்​கொண்​டனர்.

இரண்​டாம் நாளான நேற்று முன்​தினம் நடை​பெற்ற சோதனை​யின்​போது இரவு 9 மணி​யாகி​யும் பெண் ஊழியர்​கள் உள்​ளிட்​டோரை வெளியே செல்ல அனு​ம​திக்​க​வில்​லை. இதனால் பெண் ஊழியர்​களின் குடும்​பத்​தினர் கைக்​குழந்​தைகளு​டன் அலு​வல​கத்​துக்கு வந்​தனர்.

இதையடுத்து பெண் ஊழியர்​கள் மட்​டும் வீட்​டுக்​குச் செல்ல அனு​ம​திக்​கப்​பட்​டனர். நேற்று அதி​காலை 5 மணி வரை சோதனை தொடர்ந்​தது. பின்​னர் நேற்று 3-வது நாளாக காலை 10 மணி​யள​வில் தொடங்​கிய சோதனை இரவு வரை நீடித்​தது. வரும் செப். 27-ம் தேதி வரை சோதனை நடை​பெறும் என்று வரு​மான வரித் துறை அதிகாரி​கள் வட்​டாரத்​தில் தெரிவிக்​கப்​பட்​டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.