வாங்சுக்கின் பாகிஸ்தான் தொடர்பு குறித்து சிபிஐ விசாரணை: லடாக் நிலவரம் பற்றி துணைநிலை ஆளுநர் ஆலோசனை

லே: வன்​முறை​யால் பாதிக்​கப்​பட்ட லடாக்​கில் பாது​காப்பு நில​வரம் குறித்து துணநிலை ஆளுநர் உயர் அதி​காரி​களு​டன் நேற்று ஆலோ​சனை நடத்​தி​னார். இதனிடையே, பரு​வநிலை செயல்​பாட்​டாளரின் பாகிஸ்​தான் தொடர்பு குறித்து சிபிஐ விசா​ரித்து வருகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்​துக்​கான சிறப்பு அந்​தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்​யப்​பட்டது. இதையடுத்​து, ஜம்​மு-​காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்​களாக பிரிக்​கப்​பட்​டன. இந்​நிலை​யில், ஜம்மு காஷ்மீர் மற்​றும் லடாக் பகுதி மக்​கள் தங்​கள் பகு​திக்கு மீண்​டும் மாநில அந்​தஸ்து வழங்க வேண்​டும் என கோரி வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், லடாக் பகு​திக்கு மாநில அந்​தஸ்து வழங்​கு​வதுடன் அரசி​யலமைப்பு சட்​டத்​தின் 6-வது அட்​ட​வணை​யில் லடாக்கை சேர்க்க வலி​யுறுத்தி பரு​வநிலை செயற்​பாட்​டாளர் சோனம் வாங்​சுக் கடந்த 2 வாரங்​களாக உண்​ணா​விரதம் மேற்​கொண்டு வந்தார்.

இந்​நிலை​யில், அவரது போராட்​டத்​துக்கு ஆதரவு அளிக்​கும் வகை​யில், ‘லே அபெக்ஸ் பாடி’ என்ற அமைப்பு நேற்று முன்​தினம் முழு அடைப்பு போராட்​டம் நடத்​தி​யது. இதன் ஒரு பகு​தி​யாக லே நகரில் திரண்ட போராட்​டக்​காரர்​கள் அங்​குள்ள லடாக் மலைப் பகுதி மேம்​பாட்டு தன்​னாட்சி கவுன்​சில் அலு​வல​கம் மற்​றும் பாஜக அலு​வல​கம் மீது தாக்​குதல் நடத்​தினர்.

மேலும் போலீ​ஸார் மீது கற்​களை வீசிய அவர்​கள், சிஆர்​பிஎப் வேன் உட்பட பல வாக​னங்​களுக்கு தீவைத்து எரித்​தனர். இதையடுத்து போலீ​ஸார் தடியடி நடத்​தி​யும் கண்​ணீர் புகைக் குண்​டு​களை வீசி​யும் வன்​முறை​யாளர்​களை விரட்​டினர். இந்த கலவரத்​தில் 4 பேர் உயி​ரிழந்​தனர்.

80-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இதையடுத்​து, அங்கு ஊரடங்கு உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்​டது. இதன்​படி, 5 மற்​றும் அதற்கு மேற்​பட்​டோர் ஒன்று கூட​வும் அனு​ம​தி​யின்றி போராட்​டம் நடத்​த​வும் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக 50-க்​கும் மேற்​பட்​டோர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். இதனிடையே போராட்​டத்​தில் கலவரம் வெடித்​த​தால், சோனம் வாங்​சுக் தனது உண்​ணா​விரத போராட்​டத்தை நேற்று முன்​தினம் வாபஸ் பெற்​றார்.

இந்த சூழ்​நிலை​யில், துணை நிலை ஆளுநர் கவிந்​தர் குப்தா தலை​மை​யில் உயர்​நிலை ஆலோ​சனை கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. இதில் காவல் துறை, சிஆர்​பிஎப் மற்​றும் நிர்​வாக துறை உயர் அதி​காரி​கள் கலந்​து​கொண்​டனர். இந்​தக் கூட்​டத்​தில், சட்​டம் ஒழுங்கு மற்​றும் பாது​காப்பு நில​வரம் குறித்து விரி​வாக ஆலோ​சனை நடை​பெற்​றது. மேலும் அமை​தியை நிலை​நாட்ட நிலை​மையை உன்​னிப்​பாக கண்​காணிக்க வேண்​டும் என்று சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​களுக்கு அவர் உத்​தர​விட்​டார்.

வெளி​நாட்டு நிதி​யுதவி: இதனிடையே, போராட்​டத்​துக்கு காரண​மான சோனம் வாங்​சுக் நிறு​விய ஹிமாலயன் இன்​ஸ்​டிடியூட் ஆப் ஆல்​டர்​நேட்​டிவ்ஸ் லடாக் நிறு​வனத்​துக்கு சட்​ட​விரோத​மாக வெளி​நாட்​டிலிருந்து நிதி​யுதவி வந்​துள்​ளது தெரிய​வந்​துள்​ளது. மேலும் வாங்​சுக் கடந்த பிப்​ர​வரி 6-ம் தேதி பாகிஸ்​தானுக்கு சென்று வந்​துள்​ளார்.

இதுகுறித்​து சிபிஐ அதி​காரி​கள்​ வி​சா​ரணை​யை தொடங்​கி உள்​ளனர்​. மேலும், சோனம் வாங்சுக் தலைமையிலான லடாக் கல்வி மற்றும் கலாச்சார இயக்கத்துக்கு ‘வெளிநாட்டு நன்கொடை (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் (எப்சிஆர்ஏ) அளிக்கப்பட்ட லைசென்ஸை மத்திய அரசு நேற்று ரத்து செய்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.