நகரி, –
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் தார்நாகா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 3 மாணவிகள் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்கள். சம்பவத்தன்று இவர்கள் 3 பேரும் பதுகம்மா விழா நடைபெறுவதாக கூறி வெளியே சென்றனர். ஆனால் வீடு திரும்பவில்லை. மாயமான 3 மாணவிகளையும் கண்டுபிடித்து தரும்படி அவர்களது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.போலீஸ் விசாரணையில், சுற்றுலா அழைத்து செல்வதாக ஆசை வார்த்தை கூறி 3 மாணவிகளும் ஐதராபாத் மாநகராட்சி ஊழியர் மது (வயது 19) என்பவருடன் யாதகிரி குட்டா என்ற சுற்றுலாத்தலத்துக்கு சென்றது தெரியவந்தது. அங்கு மதுவின் நண்பர்கள் அரவிந்த் (22), நீரஜ் (22) ஆகியோரும் சென்றுள்ளனர். 3 மாணவிகளையும் தங்கும் விடுதியில் தங்கவைத்து மது உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து கற்பழித்ததாக தெரிகிறது.
பின்னர் நைசாக தார்நாகா பகுதியில் விட்டுச்சென்று விட்டனர். இதனையடுத்து போலீசார் மது உள்ளிட்ட 3 பேரையும், அவர்களுக்கு தங்கும் விடுதியில் அறை கொடுத்த சோமேஷ் என்பவரையும் கைது செய்தனர்.