கரூர்: நடிகர் விஜயின் பிரசார பயணத்தின்போது கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 39ஆக உயர்ந்துள்ள நிலையில், அங்கு சென்று நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலில், அழுகுரல் ஏற்படுத்திய வலி என் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை என பதிவிட்டுள்ளார். கரூரில் நடைபெற்ற விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் முதல்வர் ஸ்டாலின் இரவோ, தலைமைச்செயலகம் […]
