Asia Cup Final: இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை இறுதிப்போட்டி இன்று துபாயில் நடைபெற்றது. கிட்டத்தட்ட 41 ஆண்டுகள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசிய கோப்பை இறுதி போட்டியில் விளையாடவில்லை, இதனால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. இந்த தொடரில் ஏற்கனவே இரண்டு முறை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய நிலையில் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி தான் வென்று இருந்தது. இன்றைய போட்டியிலும் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக வெளியேறி உள்ள நிலையில் அவருக்கு பதிலாக ரிங்கு சிங் அணியில் இடம் பெற்றுள்ளார். கடந்த இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்து வீசிய அர்ஸ்தீப் சிங் இன்றைய போட்டியில் இடம்பெறவில்லை.
Add Zee News as a Preferred Source
பாகிஸ்தான் பேட்டிங்!
முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பம் அசத்தலாக இருந்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 84 ரன்கள் சேர்த்தனர். சாஹிப்சாதா ஃபர்ஹான் மற்றும் ஃபகார் ஜமான் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் பவுலர்களை திக்கு முக்காடச் செய்தனர். பத்தாவது ஓவரில் வருண் சக்கரவர்த்தியின் பந்தில் சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆட்டமிழக்க போட்டி அப்படியே தலைகீழாக மாறியது. 84 ரன்கள் வரை ஒரு விக்கெட் கூட இழக்காத பாகிஸ்தான் அணி 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பியதால் 200 வர வேண்டிய டார்கெட் வெறும் 146 ஆக மாறியது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் நான்கு விக்கெட்டுகளும், பும்ரா, வருண் மற்றும் அக்சர் படேல் தலா இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினர். 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியது.
An excellent bowling performance
wickets for Kuldeep Yadav
wickets each for Jasprit Bumrah, Axar Patel and Varun Chakaravarthy#TeamIndia need 147 to win
Updates https://t.co/0VXKuKPkE2#AsiaCup2025 | #Final pic.twitter.com/CNRcsGriwR
— BCCI (@BCCI) September 28, 2025
இந்தியா பேட்டிங்
எளிய இலக்கை எதிர்த்து ஆடிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அதிரடி வீரர் அபிஷேக் ஷர்மா இரண்டாவது ஓவரிலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அதனை தொடர்ந்து கேப்டன் சூரிய குமார் யாதவ் மற்றும் சுப்மன் கில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பவர் பிளேக் உள்ளேயே பறிகொடுத்தனர். அதன் பிறகு ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சங் மற்றும் திலக் வர்மா கூட்டணி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இவர்களது பார்ட்னர்ஷிப் இந்தியாவிற்கு பெரிதும் உதவியது. சஞ்சு சாம்சங் ஆட்டமிழக்க அதன் பிறகு வந்த சிவம் தூபே சிறப்பாக விளையாடினார். இவர்களது பார்ட்னர்ஷிப் இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தது. சிறப்பாக விளையாடிய திலக் வர்மா கடைசிவரை ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் அடித்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிறப்பாக ஒரு சிக்சர் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் இந்திய அணி ஒன்பதாவது முறையாக ஆசிய கோப்பையை வென்றது.
எவ்வளவு பரிசு தொகை?
ஆசிய கிரிக்கெட் கவுன்சில், 2025ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் பரிசு தொகையை, முந்தைய ஆண்டுகளை விட உயர்த்தியுள்ளது. இந்த ஆண்டு, கோப்பையை வென்ற ______ அணிக்கு 300,000 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.2.6 கோடி) பரிசு தொகையாக வழங்கப்படும். இந்த தொடரின் பரிசுத் தொகை, கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது சுமார் 50% வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது, ஆசிய கோப்பை தொடரின் வளர்ந்து வரும் வர்த்தக மதிப்பையும், உலகளாவிய புகழையும் எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது. அதே போல இரண்டாம் இடம் பிடித்த ______ அணிக்கு ரூ. 1.3 கோடி பரிசு தொகை கிடைக்கும். மேலும் தொடர் நாயகன், சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த பந்துவீச்சாளர், இறுதி போட்டியின் ஆட்ட நாயகன் ஆகியோருக்கும் பரிசு வழங்கப்படும்.
About the Author
RK Spark