டோக்கியோ,
பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான கேஸ்பர் ரூட் (நார்வே) – ஆஸ்திரேலியாவின் அலெக்சாண்டர் வுகிக் உடன் மோதினார்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய கேஸ்பர் ரூட் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அலெக்சாண்டர் வுகிக்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
Related Tags :