IND vs PAK: சூர்யகுமார் யாதவ் செய்த சம்பவம்! உச்சகட்ட கோபத்தில் பாகிஸ்தான்!

பாகிஸ்தானுக்கு எதிரான இறுதி போட்டியில் ஆசிய கோப்பை 2025ஐ இந்தியா வென்றபோதும், வெற்றிக்கு பிந்தைய பரிசளிப்பு விழாவில் இந்திய அணி கோப்பையை ஏற்க மறுத்தது. இது கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. ஆசிய கோப்பை இறுதி போட்டியில், பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா 9வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆனால், வெற்றிக்கு பிந்தைய கொண்டாட்டங்கள், பெரும் குழப்பத்துடனேயே தொடங்கின. இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், “வெற்றி பெற்ற ஒரு அணிக்கு கோப்பை மறுக்கப்பட்டது என் கிரிக்கெட் வாழ்வில் நான் கண்டிராத ஒன்று” என்று தெரிவித்துள்ளார்.

Add Zee News as a Preferred Source

When the game is done, only the champions will be remembered and not the picture of a  pic.twitter.com/0MbnoYABE3

— Surya Kumar Yadav (@surya_14kumar) September 28, 2025

பரிசளிப்பு விழாவில் அரங்கேறிய நாடகம்

போட்டி முடிந்த பிறகு, சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரிசளிப்பு விழா தொடங்கப்படவில்லை. பாகிஸ்தான் வீரர்கள், தங்களது உடை மாற்றும் அறையை விட்டு வெளியே வர தாமதப்படுத்தியதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையைப் பெற, இந்திய அணி வீரர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இதனால் விழா மேடைக்கு வராமல், சிறிது தூரத்திலேயே அவர்கள் நின்றுகொண்டனர். மொஹ்சின் நக்வி மேடைக்கு வந்தபோது, மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்கள், “பாரத் மாதா கி ஜೈ” என்று முழக்கமிட்டனர். இதனால், அங்கு மேலும் பரபரப்பு ஏற்பட்டது. 

“உண்மையான கோப்பை வீரர்கள் தான்” – சூர்யகுமார் யாதவ்

இந்த சர்ச்சை குறித்து, போட்டிக்கு பிந்தைய பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். “கடினமாக உழைத்து வென்ற ஒரு கோப்பை அணிக்கு மறுக்கப்பட்டது. இதை என் கிரிக்கெட் வாழ்வில் நான் பார்த்ததில்லை. ஆனால், என்னை பொறுத்தவரை, எனது வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்கள் தான் உண்மையான கோப்பைகள். அந்த நினைவுகளைத்தான் நான் என்னுடன் எடுத்து செல்கிறேன்,” என்று அவர் கூறினார். மேலும், இது ஒரு தனிப்பட்ட முடிவு அல்ல என்றும், அணியாக எடுக்கப்பட்ட முடிவு என்றும் அவர் தெரிவித்தார். இந்த தொடரில் தனக்குக் கிடைத்த போட்டி ஊதியம் முழுவதையும், இந்திய ராணுவத்திற்கும், பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட வீரர்களின் குடும்பங்களுக்கும் வழங்குவதாகவும் அவர் அறிவித்தார்.

I have decided to donate my match fees from this tournament to support our Armed Forces and the families of the victims who suffered from the Pahalgam terror attack. You always remain in my thoughts 

Jai Hind 

— Surya Kumar Yadav (@surya_14kumar) September 28, 2025

புறக்கணிப்புக்கான பின்னணி

இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் அரசியல் பதட்டங்களே, இந்த புறக்கணிப்புக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மற்றும் பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் என இரட்டை பதவிகளை மொஹ்சின் நக்வி கையில் வெற்றி கோப்பையாய் வாங்குவது இந்திய அணிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. முன்னதாக, இந்திய ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக சூர்யகுமார் யாதவ் கருத்து தெரிவித்ததற்கு, அவருக்கு எதிராக ஐசிசியிடம் நக்வி புகார் அளித்திருந்தார். இது இருதரப்பு உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியது.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.