பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த யூடியூபர் வாசிம் அக்ரம் கைது

பரிதாபாத்: ஹரி​யா​னா​வின் பல்​வால் மாவட்​டம் கோட் கிராமத்​தைச் சேர்ந்​தவர் வாசிம் அக்​ரம். இவர் ஹிஸ்ட்ரி ஆப் மேவாட் என்ற தலைப்​பில் யூடியூபில் வீடியோக்​களை பதி​விட்டு வரு​கிறார்.

இதுகுறித்து காவல் துறை அதி​காரி​கள் கூறிய​தாவது: பாகிஸ்​தானின் ஐஎஸ்ஐ மற்​றும் அதன் தூதரகத்துக்கு கடந்த மூன்று ஆண்​டு​களாக உளவு பார்க்​கும் வேலையை வாசிம் அக்​ரம் செய்​து​வந்​துள்​ளார். அக்​ரம் தொலைபேசியி​லிருந்து வாட்​ஸ்​அப் உரை​யாடல்​களை போலீ​ஸார் கண்​டறிந்​துள்​ளனர். பாகிஸ்​தானின் மற்​றொரு உளவாளி​யான தவுபிக்கை கைது செய்து விசா​ரித்தபோது அவர் அக்​ரம் குறித்த தகவல்​களை தெரி​வித்​தார். அப்​போது​தான் உண்​மை​கள் தெரிந்​தது.

அக்​ரம் மற்​றும் தவுபிக் இரு​வரும் இணைய அழைப்​பு​கள் மூலம் ஐஎஸ்ஐ மற்​றும் பாகிஸ்​தான் தூதரகத்துடன் தொடர்​பில் இருந்​துள்​ளனர். இந்த வழக்​கில் பலர் கைது செய்​யப்பட வாய்ப்​புள்​ளது. இவ்​வாறு அதி​காரி​கள்​ தெரிவித்​தனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.