அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி அசீம் முனிர் ஆகியோர் சமீபத்தில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டு ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர்.

இதில் கனிம வளங்கள் ஒப்பந்தம் தொடர்பாக ஆலோசித்தனர். அப்போது பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள கனிம மாதிரிகளை டிரம்பிடம் காண்பித்தனர். இந்த நிலையில் அரபிக் கடலில் புதிய துறைமுகத்தை அமைக்க திட்டமிட்டுள்ள பாகிஸ்தான் அதற்காக அமெரிக்காவின் உதவியை நாடி உள்ளது.பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள கனிம வளங்களை பூமியில் இருந்து வெட்டி எடுத்து தனது பொருளாதாரத்தை மேம்படுத்த பாகிஸ்தான் திட்டமிட்டு வருகிறது. கனிமங்களை உலகச் சந்தைக்குக் கொண்டு செல்ல பலுசிஸ்தான் மாகாணம் குவாதர் மாவட்டம் அருகே உள்ள கடற்கரை நகரமான பாஸ்னியில் புதிய துறைமுகம் கட்ட பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இங்கு சிவில் துறைமுகத்தை அமெரிக்கா உருவாக்கலாம் என்று பாகிஸ்தான் முன்மொழிந்துள்ளது. அமெரிக்க முதலீட்டாளர்கள் இந்தத்துறைமுகத்தைக்கட்டவும் இயக்கவும் பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தத் துறைமுகம் பாகிஸ்தானின் உள்பகுதிகளில் இருந்து என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனிமங்களை கொண்டு செல்வதற்கான புதிய ரெயில் பாதையுடன் இணைக்கப்படும் ஆப்கானிஸ்தான் மற்றும் எல்லையான ஈரானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் துறைமுக நகரமான பஸ்னி தற்போது இந்தியா மேம்படுத்தி வரும் ஈரானின் சாபஹார் துறைமுகத்திற்கு அருகில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.