தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 16-ல் தொடங்கும்: 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்​தில் வடகிழக்​குப் பரு​வ​மழை வரும் 16 முதல் 18-ம் தேதிக்​குள் தொடங்க வாய்ப்​புள்​ளது. இன்று நீல​கிரி உள்​ளிட்ட 11 மாவட்​டங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இது தொடர்​பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தென்​மேற்​குப் பரு​வ​மழை வரும் 16 முதல் 18-ம் தேதி​களில் வில​கு​வதற்​கான சாத்​தி​யக்​கூறுகள் உள்​ளன. அதே​நேரத்​தில், வளிமண்டல கீழடுக்​கு​களில் கிழக்கு மற்​றும் வடகிழக்கு திசைக் காற்று வீசக்​கூடிய நிலை​யில் தமிழகம், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களில் வடகிழக்கு பரு​வ​மழை வரும் 16 முதல் 18-ம் தேதிக்​குள் தொடங்​கு​வதற்​கான சாத்​தி​யக்​கூறுகள் உள்​ளன.

வட தமிழக கடலோரப் பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நில​வு​கிறது. வடக்கு ஆந்​திரா மற்​றும் அதையொட்​டிய பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நில​வு​கிறது. இதன் காரண​மாக தமிழகத்​தில் இன்று (அக். 11) பெரும்​பாலான இடங்​களி​லும், வரும் 12 முதல் 16-ம் தேதி வரை சில இடங்​களி​லும் இடி, மின்​னலுடன் கூடிய, லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

தமிழகத்​தில் இன்று நீல​கிரி மாவட்​டத்​தில் ஓரிரு இடங்​களில் கனமுதல் மிக கனமழை​யும், கோவை மாவட்ட மலைப் பகு​தி​கள், திருப்​பூர், திண்​டுக்​கல், தேனி, மதுரை, சிவகங்​கை, தரு​மபுரி, சேலம், திரு​வண்​ணா​மலை மற்​றும் திருப்​பத்​தூர் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களிலும் கனமழை​யும் பெய்ய வாய்ப்​புள்​ளது.

நாளை கோவை மாவட்ட மலைப் பகு​தி​கள், நீல​கிரி, ஈரோடு, திருப்​பூர், திண்​டுக்​கல், தேனி மற்​றும் தென்​காசி மாவட்​டங்​களி​லும் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது. தென் தமிழக கடலோரப் பகு​தி​கள், மன்​னார் வளை​குடா மற்​றும் அதை யொட்​டிய குமரிக்​கடல் பகு​தி​களில் இன்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்​தி​லும், இடை​யிடையே 55 கி.மீ. வேகத்​தி​லும் சூறாவளிக் காற்று வீசக்​கூடும். எனவே, இப்​பகு​தி​க்கு மீனவர்​கள் செல்ல வேண்​டாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.