மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை

துர்காபூர்: மேற்கு வங்க மாநிலத்​தின் துர்​காபூரில் உள்ள தனி​யார் மருத்​துவக் கல்​லூரி ஒன்​றில், ஒடி​சாவைச் சேர்ந்த மாணவி ஒரு​வர் 2-ம் ஆண்டு எம்​.பி.பி.எஸ் படிக்​கிறார்.

இவர் தனது ஆண் நண்​பர் ஒரு​வருடன் நேற்று முன்​தினம் மாலை வெளியே சென்று விட்டு இரவு 8.30 மணி​யள​வில் கல்​லூரிக்கு திரும்​பி​னார். அப்​போது ஒரு கும்​பல் மருத்​துவ மாண​வியை மிரட்டி அரு​கில் பாலியல் வன்​கொடுமை செய்​துள்​ளனர். மாண​வி​யுடன் சென்ற ஆண் நண்​பர் அங்​கிருந்து தப்​பிச் சென்​று​விட்​டார்.

இச்​சம்​பவம் குறித்து மாண​வி​யின் தந்தை நேற்று போலீ​ஸில் புகார் அளித்​தார். அதில் தனது மகளின் நண்​பர் பொய் சொல்​லி​யும், தவறாக வழிநடத்​தி​யும், ஆள்​நட​மாட்​டம் இல்​லாத பகு​திக்கு அழைத்​துச் சென்​றுள்​ளார். பாலியல் வன்​கொடுமை செய்த கும்​பல் தனது மகளின் செல்​போனை பறித்​துக் கொண்​டு, அவரிடம் இருந்த ரூ.5,000 பணத்​தை​யும் பறித்​துச் சென்​றுள்​ளது என்று கூறியுள்ளார்.

பாதிக்​கப்​பட்ட மாணவி துர்​காபூரில் உள்ள மருத்​து​வ​மனை​யில் ஆபத்​தான நிலை​யில் சிகிச்சை பெற்று வரு​கிறார். இச்​சம்​பவம் தொடர்​பாக மருத்​துவ மாண​வி​யின் நண்​பர் உட்பட பலரிடம் விசா​ரணை நடை​பெற்​று​ வரு​கிறது.

மாண​வி​யின் வாக்​குமூல​மும் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இச்​சம்​பவத்​துக்கு கண்​டனம் தெரி​வித்து துர்​காபூரில் பாஜக.​வினர் போராட்​டம் நடத்​தினர். மேற்​கு​வங்​கத்​தில் கடந்த ஜூலை மாதம் சட்​டக் கல்​லூரி மாணவி ஒரு​வர், கல்​லூரி வளாகத்​திலேயே ஒரு கும்​பலால் பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்​டார். கொல்​கத்​தா​வில் உள்ள ஆர்​.ஜி கர் மருத்​துவ கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் கடந்​தாண்டு ஆகஸ்ட் மாதம், பயிற்சி பெண் மருத்​து​வர் ஒரு​வர் பாலியல் வன்​கொடுமை கொலைக்கு ஆளா​னார். இது​போன்ற சம்​பவங்​களால் மேற்கு வங்​கத்​தின் திரிண​மூல் காங்​கிரஸ் அரசு, பெண்​கள் பாது​காப்​பில் அலட்​சி​ய​மாக உள்​ளது என்​ற குற்​றச்​சாட்​டு எழுந்​துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.