திருப்பதி: திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி கடத்திச் சென்று டெல்லியில் ஒரு குடோனில் பதுக்கி வைத்திருப்பதாக திருப்பதி அதிரடிப்படை எஸ்.பி. ஸ்ரீநிவாஸுக்கு ரகசிய தகவல் கிடைத்து.
இதையடுத்து தமிழகத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரை அதிரடிப் படையினர் பிடித்து விசாரித்தனர். அவர் கொடுத்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் ஷேக் காதர் பாஷா தலைமையில் சிறப்பு அதிரடிப் படையினர் டெல்லி சென்றனர்.
அங்கு உள்ளூர் போலீஸார் உதவியுடன் ஒரு குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.8 கோடி மதிப்புள்ள 10 டன் செம்மரங்களை பறிமுதல் செய்தனர். மேலும் முகமது இர்பான், செம்மர கடத்தல்காரர் அமித் சம்பத் பவார் ஆகியோரை திருப்பதி போலீஸார் கைது செய்தனர்.