சிறந்த சின்னத்திரைக் கலைஞர்களைக் கெளரவிக்கும் 2024-ம் ஆண்டுக்கான விகடன் சின்னத்திரை விருதுகள் விழா இன்று நடைபெற்று வருகிறது.
இதில் ‘Heart Beat’ தொடருக்கு ‘Most Celebrated Series’ விருது வழங்கப்பட்டது. ‘தரமணி’, ‘ஜெயிலர்’ நடிகர் வசந்த் ரவி இவ்விருதினை வழங்கி சிறப்பித்தார்.

விருது விழா மேடையில் ‘ஜெயிலர் 2’ குறித்துப் பேசிய வசந்த்ரவி, “தரமணி’ படத்துக்காக முதன்முதலில் நான் வாங்கிய விருது விகடன் சினிமா விருதுதான்.
‘ஜெயிலர் 2’-ல் நான் இருக்கிறேனா, இல்லையா என்று எனக்கே தெரியவில்லை. நெல்சன் சார்கிட்ட, ` `ஜெயிலர் 2’-வில் நான் இருக்கிறேனா… பத்திரிகையாளர்கள் கேட்டால் என்ன சொல்றது?’ என்று கேட்டேன். அதற்கு நெல்சன், ‘படம் வரும்போது பாருங்கள்’ என்று சொல்ல சொன்னார்.
பயோ பிக் படத்தில் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை. நிறைய முறை அதற்காகப் பேசியிருக்கிறேன். ஆனால் இன்னும் சரியாகக் கதை கிடைக்கவில்லை. டாக்டர்கள் பற்றிய கதையில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கு. நல்ல கதை இருந்தால் சொல்லுங்க, பண்ணலாம்” என்று பேசியிருக்கிறார்.