அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டுதல் தொடர்பான: வழக்குகளை விசாரிக்க 2 நீதிபதிகள் அமர்வு

மதுரை: அரசி​யல் கூட்​டங்​களுக்​கான வழி​காட்​டு​தல்​களை உரு​வாக்​கு​வது தொடர்​பான மனுக்​களை விசா​ரிக்க விரை​வில் 2 நீதிபதி​கள் கொண்ட அமர்வு அமைக்​கப்​படும் என சென்னை உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி தெரி​வித்​துள்​ளார்.

தூத்​துக்​குடி மாவட்​டம் சிந்​தலக்​கரையைச் சேர்ந்த திருக்​குமரன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறியிருப்​ப​தாவது: கரூரில் நடந்த தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி குழந்​தைகள், மாணவ, மாணவி​கள் உட்பட 41 பேர் உயி​ரிழந்​தனர்.

சரி​யான கூட்ட மேலாண்மை மற்​றும் கட்​டுப்​பாடு இல்​லாமை, உரிய நேரத்​தில் கூட்​டம் நடத்​தாமை, பொது​மக்​கள் பாதுகாப்புக்கான அரசு வழி​காட்​டு​தல் பின்​பற்​றப்​ப​டாதது, நிகழ்ச்சி நடை​பெறும் இடத்​தில் அடிப்​படை வசதி​கள், அவசர நடவடிக்கை திட்​டம் இல்​லாமை ஆகியன கரூர் சம்​பவத்​துக்கு முக்​கியக் காரணங்​களாகும்.

எனவே, வருங்​காலத்​தில் அனைத்​துக் கட்​சிகள், பொதுநல அமைப்​பு​கள் கூட்​டம் நடத்​தும்​போது அரசின் கட்​டுப்​பாடு, கண்காணிப்பை மீறாமல் இருப்​பதை உறு​திப்​படுத்த வேண்​டும். கூட்​டம் நடை​பெறும் இடத்​தில் மக்​கள் கூட்​டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்​கை, அவசர வசதி​கள், அடிப்​படை வசதி​கள் ஏற்​படுத்​துதல் உட்பட பல்​வேறு கட்​டுப்​பாடு​களை விதிக்க வேண்டும். குறிப்​பிட்ட நேரத்​தில் தொடங்​கப்​ப​டாத நிகழ்ச்​சிகளை ரத்து செய்ய வேண்​டும்.

கட்​சி​யினரின் பொதுக்​கூட்​டங்​கள், பேரணி​களை முறைப்​படுத்​த​வும், உரிய பாது​காப்பு மற்​றும் வழி​காட்டு நெறி​முறை​களை வகுக்​க​வும், குறுகலான பகு​தி​களுக்கு பதில் அதிக அளவில் ஆட்​கள் கூடும் பரப்​பளவு கொண்ட இடத்​தில் அரசி​யல் நிகழ்வுகளுக்கு அனு​மதி வழங்க உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

தஞ்​சாவூர் ஸ்ரீனி​வாசபுரத்தை சேர்ந்த பிர​காஷ், தாக்​கல் செய்த மனு​வில், “உரிய அனு​ம​தி​யின்றி பிளக்ஸ் போர்​டு​கள், டிஜிட்​டல் பதாகைகள், கட்சி கொடிகள், சுவர் விளம்​பரங்​கள் செய்​வதை தடுக்​க​வும், அசம்​பா​விதங்​கள் நிகழும் சூழலில் நிகழ்வை ஒருங்​கிணைத்த கட்சி சேதங்​கள், காயங்​கள் மற்​றும் உயி​ரிழப்​பு​களுக்கு முழு பொறுப்பு ஏற்​க​வும் உத்​தர​விட வேண்​டும்” என்று குறிப்​பிட்​டிருந்​தார்.

இந்த மனுக்​களை தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்​த​வா, நீதிபதி பூர்​ணிமா அமர்வு விசா​ரித்​து, “அரசி​யல் கூட்​டங்​களை நடத்த உரிய வழி​காட்டு நெறி​முறை​களை பிறப்​பிப்​பது தொடர்​பான வழக்​கு​களை சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் 2 நீதிப​தி​கள் கொண்ட அமர்வு விசா​ரிக்க உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. அதனடிப்​படை​யில் 2 நீதிப​தி​கள் கொண்ட அமர்வு விரை​வில் அமைக்​கப்​படும். அதன் பிறகு அரசி​யல் நிகழ்​வு​கள் தொடர்​பான வழி​காட்டு நெறி​முறை​களை பிறப்​பிப்​பது தொடர்​பான அனைத்து மனுக்​களும்​ வி​சா​ரிக்​கப்​படும்​” என உத்​தரவிட்​டனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.