புதுடெல்லி,
தமிழக கவர்னர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழக சட்டசபையில் கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விளையாட்டு பல்கலைக்கழகக் குழுவில் நிதித்துறை செயலர் ஒருவரை நியமிக்க ஏதுவாக சட்ட திருத்தம் செய்யப்பட்டிருந்தது.
இந்த மசோதாவை ஜனாதிபதிக்கு தமிழ்நாடு கவர்னர் அனுப்பி வைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கவர்னருக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “மசோதாக்களை கவர்னர் கையாளும் விதம் அரசமைப்புக்கு எதிரானது. கவர்னரின் நடவடிக்கை தன்னிச்சையானது என்று அறிவிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.