Ajith: “ `GBU'பெரிய அளவில் லாபம் ஈட்டவில்லை என்றாலும்" – `மைத்ரி மூவி மேக்கர்ஸ்' நிறுவனம் தகவல்!

`குட் பேட் அக்லி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் பயணத்தைத் தொடங்கியிருக்கிறது மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம்.

அப்படத்தைத் தொடர்ந்து இரண்டாவதாக `டியூட்’ படத்தை திரைக்குக் கொண்டு வருகிறது அந்நிறுவனம்.

டியூட் படக்குழுவினர்
டியூட் படக்குழுவினர்

`டியூட்’ படத்தின் ரிலீஸையொட்டி ஹைதராபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து `மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனத்தின் நவீன் மற்றும் ரவி ஷங்கர் பேசியிருக்கிறார்கள்.

அதில் அவர்கள், “ குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றியில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்தப் படம் அஜித்குமாருக்கு ஒரு பெரிய வசூல் வெற்றியாக அமைந்தது.

தமிழ்நாடு மற்றும் மற்ற மொழி பார்வையாளர்களிடமும் சிறப்பான வரவேற்பைப் பெற்றது.

பெரிய அளவில் லாபம் ஈட்டவில்லை என்றாலும், எந்தவித நஷ்டமும் இல்லாமல் இருந்ததில் மகிழ்ச்சி.

இது எங்களுக்கு ஒரு நல்ல வெற்றிகரமான திட்டமாக அமைந்தது. இந்தப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஒரு வலுவான மற்றும் பிளாக்பஸ்டர் அளவிலான நுழைவைப் பெற்றிருக்கிறோம்.

Good Bad Ugly
Good Bad Ugly

இது எங்களுக்கு பெரும் நம்பிக்கையை அளிக்கிறது. அஜித்குமாருடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது.

மேலும் இந்த வெற்றியைப் பார்த்த பிறகு, எதிர்காலத்தில் அவருடன் மேலும் பல படங்களில் ஒத்துழைக்க திட்டமிட்டுள்ளோம்.

`டியூட்’ தமிழில் உருவாக்கப்பட்ட திரைப்படம். ஆனால் தெலுங்கிலும் இது நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கிறோம். இந்தப் படம் ஏற்கெனவே ₹35 கோடி அளவில் லாபத்தை ஈட்டியுள்ளது.” எனக் கூறியிருக்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.