கர்நாடகா: முதல்-மந்திரி சித்தராமையா பங்கேற்ற நிகழ்ச்சியில் 13 பேர் மயக்கம்

பெங்களூரு,

கர்நாடகாவின் தட்சண கன்னடாவில் புட்டூர் பகுதியில் அசோகா ஜனமன 2025 என்ற பெயரிலான நிகழ்ச்சி ஒன்று நடந்தது. புட்டூர் எம்.எல்.ஏ. அசோக் குமார் ராய் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டது.

இதனால், அவரை காண திரளான மக்கள் கூடினர். இந்நிகழ்ச்சி மதியம் 12 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் மதியம் 1 மணி அளவில் நிகழ்ச்சி நடந்த மேடைக்கு வந்துள்ளார். பிற்பகல் 3 மணிக்கு நிகழ்ச்சி நிறைவடைந்தது. இதில், 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின்போது, சேலைகள் மற்றும் உணவு வழங்கப்பட்டன.

இந்நிலையில், 6 மணிநேரத்திற்கு மேலாக பலர் காத்திருந்தனர். இதில், ஒரு சிலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை. மொத்தம் 13 பேர் மயக்கம் அடைந்தனர். அவர்களில் 3 பெண்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.