சென்னை: தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அறுந்து கிடக்கும் மின்கம்பிகள் குறித்து பொதுமக்களுக்கு மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது. மழைக்காலங்களில் மின்வாரியம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மின்கம்பங்கள், மின்மாற்றிகள், மின் பகிர்வுப் பெட்டிகள் மற்றும் மின் இணைப்புகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். மின்கம்பிகள் அறுந்து கிடந்தால், அதைத் தொடாமல் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும். குழந்தைகள் மின்கம்பங்களுக்கு அருகில் விளையாடுவதைத் தடுக்க வேண்டும் என கூறி […]
