சென்னை: தமிழ்நாட்டில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று மழை பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியார்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். தமிழ்நாட்டில் அக்டோபர் 16ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் பரவலாக மிதமானது முதல் கனமழை கொட்டி வருகிறது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், விவசாயிகளின் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வருவதுடன், பல பகுதிகளில் பயிர்களும் மழை நீரில் மூழ்கி […]
