கம்பாலா,
கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு உகாண்டா. இந்நாட்டின் தலைநகர் கம்பாலாவில் இருந்து குலு நகருக்கு நேற்று இரவு பஸ் சென்றுகொண்டிருந்தது.
அந்த நெடுஞ்சாலையில் வேகமாக வந்த மற்றொரு பஸ் இந்த பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. மேலும், சாலையில் சென்றுகொண்டிருந்த மேலும் சில வாகனங்கள் மீதும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 46 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
மேலும், இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உகாண்டாவில் கடந்த ஆண்டு சாலைவிபத்தில் 5 ஆயிரத்து 144 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.