முப்படைகளுக்கு ரூ.79,000 கோடியில் ராணுவ தளவாடம் கொள்முதல்: பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல்

புதுடெல்லி: ரூ.79,000 கோடி மதிப்​பில், முப்​படைகளுக்கு தேவை​யான ராணுவ தளவாடங்​கள் வாங்க பாது​காப்பு அமைச்​சகம் ஒப்​புதல் அளித்​துள்​ளது.

ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கைக்​குப் ​பின் ராணுவ தளவாட பொருட்​கள் கொள்​முதலுக்கு உடனுக்​குடன் ஒப்​புதல் அளிக்​கப்​படு​கிறது. கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ரூ.67,000 கோடி​யில் தள வாட​ங்கள் கொள்​முதல் செய்ய ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில் நவீன தளவாடப் பொருட்​கள் தேவை என முப்​படைகள் சார்​பில் வேண்​டு​கோள் விடுக்​கப்​பட்​டது. இதையடுத்து பாது​காப்பு தளவாடப் பொருட்​கள் கொள்​முதல் கவுன்​சில் கூட்​டம், பாது​காப்​புத்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது.

இதில் கடற்​படைக்​காக, கரை​யில் ராணுவ வீரர்​கள், சரக்​கு​களை இறக்​கும் வசதி​யுடன் கூடிய போர்க்​கப்​பல்கள், 30 எம்​.எம் பீரங்​கி​கள், நவீன எடை குறைவான டார்​பிடோக்​கள், எலக்ட்ரோ ஆப்​டிக்​கல் கண்​காணிப்பு கருவி​கள், 76 எம்​எம் பீரங்​கி​களுக்​கான ஸ்மார்ட் குண்​டு​கள் ஆகியவை வாங்க ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது.

தரைப்​படை மற்​றும் விமானப்படை​யுடன் இணைந்து பணி​யாற்​ற​வும், அமை​திப்​படை நடவடிக்​கைகள், பேரிடர் காலத்​தில் நிவாரண பணி​களை மேற்​கொள்ளவும் கடற்​படைக்கு எல்​பிடி கப்​பல்​கள் உதவி​யாக இருக்​கும். அதே​போல் டிஆர்​டிஓ உள்​நாட்​டில் தயாரித்​துள்ள ஏஎல்​டபிள்​யூடி டார்​பிடோக்​கள் மூலம் எதிரி நாட்​டின் அனைத்து வகை​யான நீர்​மூழ்கி கப்​பல்​களை​யும் தகர்க்க முடி​யும். 30 எம்​எம் என்​எஸ்ஜி பீரங்​கி​கள், கடல் கொள்​ளை​யர்​கள் மீது தாக்​குதல் நடத்த கடற்​படை மற்​றும் கடலோர காவல் படைக்கு உதவி​யாக இருக்​கும்.

தரைப்​படைக்​காக, எதிரி படைகளின் கவச வாக​னங்​களை தகர்க்​கும் நாக் ஏவு​கணை​கள் மற்​றும் எலக்ட்​ரானிக் உளவு கருவிகள் மற்​றும் கன ரக வாக​னங்​கள் வாங்க ஒப்​புதல் அளிக்​கப்பட்​டது.

விமானப்​படைக்​காக தானி​யங்கி ஆயுதங்​கள் உட்​பட இதர தள​வாடப்​ பொருட்​கள்​ ​வாங்​க​வும்​ ஒப்​புதல்​ அளிக்​கப்​பட்​டது. இவற்​றின்​ மொத்​த மதிப்​பு ரூ.79,000 கோடி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.