மழையால் பாதிக்கப்படுவோரை தங்க வைக்க சென்னையில் 215 நிவாரண முகாம்கள் தயார்

சென்னை: வங்​கக் கடலில் உரு​வாகும் புயலை எதிர்​கொள்ள சென்னை மாநக​ராட்சி சார்​பில் 215 நிவாரண முகாம்​கள் தயா​ராக இருப்​ப​தாக தமிழக அரசு தெரி​வித்​துள்​ளது. தமிழகத்தில் வடகிழக்கு பரு​வ​மழை தீவிரமடைந்​துள்​ளது. சென்னை உள்​ளிட்ட பல்​வேறு பகு​தி​களில் தொடர்ந்து மழை பெய்து வரு​கிறது. தற்​போது வங்​கக் கடலில் காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி உரு​வாகி​யுள்​ளது.

இது, மேலும் வலு​வடைந்து அக்​.27-ம் தேதி புய​லாக மாறும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதன் காரண​மாக சென்​னை, புறநகர் மாவட்​டங்​களில் 26-ம் தேதி கனமழை​யும், 27-ம் தேதி மிக கனமழை​யும் பெய்​யும் என வானிலை ஆய்வு மையம் எச்​சரித்​துள்​ளது.

இந்​நிலை​யில், சென்​னை​யில் மேற்​கொள்​ளப்​பட்​டுள்ள முன்​னேற்​பாடு​கள் குறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: பரு​வ​மழை காரண​மாக தாழ்​வான பகு​தி​களில் தேங்​கும் மழைநீ​ரால் பொது​மக்​கள் பாதிக்​கப்​படக்​கூ​டாது என முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உத்​தர​விட்​டுள்​ளார்.

மழைநீர் சூழ்ந்து பாதிக்​கப்​படும் பகு​தி​களில் உள்ள மக்​களுக்கு தேவை​யான உதவி​களை அளிக்​கும் நோக்​கில் நிவாரண முகாம்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. 215 இடங்​களில் நிவாரண முகாம்​கள் தயார் நிலை​யில் உள்​ளன. அவற்​றில் உணவு, சுகா​தார வசதி, குடிநீர் வசதி உள்​ளிட்​டவை செய்​யப்​பட்​டுள்​ளன. நிவாரண மையங்​களுக்கு உணவு வழங்க ஏது​வாக 106 மைய சமையல் கூடங்​கள் அமைக்​கப்​பட்டு தயார் நிலை​யில் உள்​ளன.

ஏற்​கெனவே பெய்த மழை​யால் பாதிக்​கப்​பட்ட 4 லட்​சத்து 400 பேருக்கு உணவு வழங்​கப்​பட்​டுள்​ளது. மாநக​ராட்சி பகு​தி​களில் தேங்​கும் மழைநீரை வெளி​யேற்ற 1,436 மோட்​டார் பம்​பு​களும், 100 எச்பி திறன் கொண்ட 150 மோட்​டார் பம்​பு​களும், மரங்​களை அகற்ற 457 அறுவை இயந்​திரங்​களும் தயார் நிலை​யில் வைக்​கப்​பட்​டுள்​ளன. அக்​.17 முதல் 22-ம் தேதி வரை 31 மரங்​கள் அகற்றப்பட்டுள்ளன.

மாநக​ராட்சி தொடர்​பான புகார்​களை 1913 என்ற எண்​ணுக்​கும், சென்னை குடிநீர் வாரிய புகார்​களை 1916 என்ற எண்​ணுக்​கும் தெரி​வித்​தால், தேவை​யான உதவி​களை பெற ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. மாநக​ராட்சி சார்​பில் 22 ஆயிரம் பேரும், சென்னை குடிநீர் வாரி​யத்​தில் 2,149 களப்​பணி​யாளர்​களும் நிவாரணம் மற்​றும் மீட்​புப் பணி​களில் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர்​. இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.