சண்டிகர்: பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடன் தொடர்பில் இருப்பவர்களையும் மத்திய அரசு கண்காணித்து, கைது செய்து வந்தது.
அந்த வகையில், இந்திய ராணுவத் தகவல்களை பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததால், பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 1.37 லட்சம் பின்தொடர்பவர்களைக் கொண்ட 33 வயதான ஹரியானாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவும் அடங்குவார்.
இந்நிலையில், ஹரியானா மாவட்டத்திலுள்ள நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு ஜோதி மல்ஹோத்ரா மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் மாவட்ட நீதிபதி டாக்டர் பர்மிந்தர் கவுர், ஜோதி மல்ஹோத்ராவின் ஜாமீன் மனுவை நிராகரித்தார்.