மதுவுக்கு மாற்றாக `ஜீப்ரா ஸ்ட்ரிப்பிங்' பழக்கத்தை விரும்பும் Gen Z- என்ன காரணம் தெரியுமா?

உலகம் முழுவதும் இளைய தலைமுறையினரிடையே, குறிப்பாக Gen Z-யினர் மத்தியில், மது அருந்தும் பழக்கம் குறைந்து வருவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

உடல் நலன், நிதி பாதுகாப்பு மற்றும் மனநலன் போன்ற காரணங்களால் Gen Z தலைமுறையினரில் சுமார் 10-ல் 4 பேர் (அதாவது 36%) மது அருந்துவதை தவிர்ப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது.

Alcohol

மதுவை நிராகரிக்கக் காரணம் என்ன?

இந்த ஆய்வை யூரோமானிட்டர் இன்டர்நேஷனல் (Euromonitor International) என்ற தரவு பகுப்பாய்வு நிறுவனம் நடத்தியுள்ளது. இந்த ஆய்வின்படி 1997 மற்றும் 2012 ஆண்டுகளுக்கு இடையில் பிறந்த Gen Z தலைமுறையினர் மது அருந்துவதால் ஏற்படும் நீண்டகால உடல்நல பாதிப்புகள் குறித்து அதிக விழிப்புணர்வுடன் இருக்கின்றனர்.

இந்த ஆய்வில் பதிலளித்தவர்களில் சுமார் 87% பேர் தங்களது உடல் நலத்தை பராமரிக்கவும், நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் மதுவைத் தவிர்ப்பதாக கூறியுள்ளனர்.

உடல்நலம் மட்டுமின்றி, நிதி பாதுகாப்பும் இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. சுமார் 30% இளைஞர்கள் பணத்தை சேமிப்பதற்காக மது அருந்துவதை தவிர்ப்பதாக தெரிவித்துள்ளனர். மனநலத்தின் மீது Gen Z தலைமுறையினர் அதிக கவனம் செலுத்துவதும் அவர்கள் மதுப் பழக்கத்தில் இருந்து விலகி இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் என கூறப்பட்டுள்ளது.

ஜீப்ரா ஸ்ட்ரிப்பிங் (Zebra Stripping)
ஜீப்ரா ஸ்ட்ரிப்பிங் (Zebra Stripping)

ஜீப்ரா ஸ்ட்ரிப்பிங் (Zebra Stripping)

இந்த ஆய்வில் ‘ஜீப்ரா ஸ்ட்ரிப்பிங்’ (Zebra Stripping) என்ற ஒரு புதிய வாழ்க்கை முறைப் பழக்கம் இளைஞர்களிடையே பிரபலமாகி வருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அதாவது, நண்பர்களுடன் கூடும் போதும் மது இல்லாத பானங்களை (Non-alcoholic beverages) மாறி மாறி அருந்தும் பழக்கத்தை அவர்கள் விரும்புகின்றனர். இந்த பழக்கவழக்கம் அவர்களுக்கு நிதானத்தை கொடுக்கும் மனநிலையை பிரதிபலிக்கிறது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.