புதுடெல்லி,
12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் தற்போது பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் நடந்து வருகிறது. இதில் முதலாவது தகுதி சுற்றில் புனேரி பால்டனை வீழ்த்தி தபாங் டெல்லி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
தோல்வி கண்ட புனேரி பால்டன் அணி 2வது தகுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்நிலையில், தொடரில் இன்று நடைபெற்ற 2வது தகுதி சுற்று ஆட்டத்தில் புனேரி பால்டன் – தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர்.
இறுதியில் இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்திய புனேரி பால்டன் அணி 50-45 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லி – புனேரி பால்டன் அணிகள் மோத உள்ளன.