புதுடெல்லி,
ஜப்பான் நாட்டின் முதலாவது பெண் பிரதமராக சனே தகைச்சி கடந்த வாரம் பதவியேற்றார்.இந்நிலையில், அவரை பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பிரதமராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்தியா-ஜப்பான் சிறப்பு உறவை மேம்படுத்துவது பற்றியும், பொருளாதார பாதுகாப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவை குறித்தும் விவாதித்தனர். உலக அமைதிக்கும், நிலைத்தன்மைக்கும் வலிமையான இந்தியா-ஜப்பான் உறவு அவசியம் என்பதை இருவரும் ஒப்புக்கொண்டனர். இருதரப்பு உறவை அதிகரிக்க நெருங்கி பணியாற்றுவது என இருவரும் முடிவு செய்தனர்.
Related Tags :