டெல்லியில் செயற்கை மழை பெய்விக்கும் திட்டம் தள்ளிவைப்பு

புதுடெல்லி: டெல்​லி​யில் செயற்கை மழை பெய்விக்​கும் திட்​டம் தற்​போதைக்கு தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ள​தாக அறிவிக்கப்பட்டுள்ளது. காற்​றின் தரம் மிக மோசமடைந்​த​தால் டெல்​லி​யில் காற்று மாசை குறைக்க செயற்கை மழை பெய்விக்க கான்​பூர் ஐஐடி​யுடன் இணைந்து செயல்பட டெல்லி அரசு முடிவு செய்​தது.

இந்​நிலை​யில் டெல்​லி​யில் நேற்று முன்​தினம் செயற்கை மழையைப் பெய்விக்க விமானம் புறப்​பட்​டது. ஆனால் போது​மான ஈரப்பதம் இல்​லாத​தால் திட்​டம் தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக ஐஐடி கான்​பூர் சார்​பில் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறும்​போது, “6 ஆயிரம் அடி உயரத்​தில் பறந்த விமானம் மூலம் டெல்​லி​யின் பல்​வேறு பகு​தி​களில் திரண்​டிருந்த மேகங்​கள் மீது ரசாயனங்​கள் தெளித்து மழை பெய்விக்க முயன்றது. மேகங்​களில் போதிய ஈரப்​ப​தம் இல்​லாத​தால் எதிர்​பார்த்த வெற்றி இல்​லை. இந்​தத் திட்​டம் தற்​போதைக்கு தள்ளி வைக்​கப்​பட்​டுள்​ளது’’ என்​று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.