விமானம் செங்குத்தாக புறப்பட, இறங்க உதவும் புதிய தொழில்நுட்பம்: சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் சாதனை 

சென்னை: ​வி​மானம் செங்​குத்​தாக புறப்​பட​வும், தரை​யிறங்​க​வும் உதவும் புதிய தொழில்​நுட்​பத்தை சென்னை ஐஐடி ஆராய்ச்​சி​யாளர்​கள் கண்​டு​பிடித்து சாதனை படைத்​துள்​ளனர்.

பொது​வாக விமானங்​கள் ஓடு​தளத்​தில் குறிப்​பிட்ட தூரம் விரை​வாக ஓடி அதன் பின்​னரே மேலே எழும்​பும். அதே​போல, வானில் இருந்து தரை​யிறங்​கும்​போதும் ஓடு​தளத்​தில் இறங்கி சற்று தூரம் சென்ற பின்​னரே குறிப்​பிட்ட இடத்தை வந்​தடை​யும். இந்த நிலை​யில், விமானம் செங்​குத்​தாக புறப்​பட​வும், தரை​யிறங்​க​வும் உதவும் புதிய தொழில்​நுட்​பத்தை (Vertical Take-off & Landing – VTOL) சென்னை ஐஐடி விண்​வெளி பொறி​யியல் துறை பேராசிரியர் பி.ஏ.​ராமகிருஷ்ணா, இணை பேராசிரியர் ஜோயல் ஜார்ஜ் மனத​ரா, ஆராய்ச்​சி​யாளர் அனந்து பத்​ரன் ஆகியோர் கண்​டு​பிடித்​துள்​ளனர்.

இதுகுறித்து அவர்​கள் கூறிய​தாவது: கடந்த 20, 30 ஆண்​டு​களாக ஹைபிரிட் ராக்​கெட் மோட்​டார்​கள் மீண்​டும் கவனத்தை ஈர்த்து வரு​கின்​றன. அவற்​றின் உந்​து​விசைத் திறன்​கள் பல்​வேறு பயன்பாடுகளுக்காக ஆய்வு செய்​யப்​படு​கின்​றன. ஹைபிரிட் ராக்​கெட் உந்​து​விசையைப் பயன்​படுத்தி, விமானத்தை செங்​குத்​தாக உயரே செலுத்​த​வும், மென்​மை​யாக தரையிறக்​க​வும் முடி​யும். இந்த புதிய தொழில்​நுட்​பத்துக்கு ஹைப்​ரிட் ராக்​கெட் உந்​து விசைகளைப் பயன்​படுத்​து​வது புது​மை​யான அம்​சம்.

இதற்கு நீண்ட ஓடு​பாதைகள் தேவைப்​ப​டாது. ஓடு​பாதைகள், பெரிய விமான நிலை​யங்​களை அமைக்க இயலாத கரடு​முர​டான நிலப்​பரப்​பு​களில் இந்த தொழில்​நுட்​பம் பெரிதும் பயன்​படும். பல்​வேறு இடங்​களுக்கு விமானப் போக்​கு​வரத்தை பரவலாக்​க​வும் உதவி​கர​மாக இருக்​கும். வணி​கப் பயன்​பாடு மட்​டுமின்​றி, மக்​களுக்​கான விமான சேவை, ராணுவ விமானப் போக்​கு​வரத்​தி​லும் மாற்​றத்தை ஏற்​படுத்​தும் என்று அவர்​கள் கூறினர். உலகப் புகழ்​பெற்ற விண்​வெளி ஆய்​விதழில் (Journal of Aeronautical and Space Sciences) அவர்​களது ஆய்​வுக் கட்​டுரை வெளி​யாகியுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.