முனுகாடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் டி.ஆர்.எஸ்.கட்சி முன்னிலை

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் முனுகாடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் டி.ஆர்.எஸ்.கட்சி முன்னிலையில் உள்ளது. டி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளர் பிரபாகர் 563 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். 2-வது சுற்று முடிவில் ஆளும் டி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளர் பிரபாகர் 14,211 வாக்குகள் பெற்றுள்ளார்.

பாலியல் புகாரில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா ஆஸ்திரேலியாவில் கைது

சிட்னி: பாலியல் புகாரில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் கொடுத்த பாலியல் வன்கொடுமை புகாரில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகாவை சிட்னி போலீஸ் கைது செய்தது.

தேர்தல் ஆணையம் அறிவிப்பு 1 எம்பி, 5 சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல்: டிச.5ல் நடக்கிறது

புதுடெல்லி: சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் சமீபத்தில் காலமானார். இதன் காரணமாக உத்தரப்பிரதேசத்தில் மெயின்புரி மக்களவை தொகுதி காலியானது. இதேபோல் உத்தரப்பிரதேசத்தின் ராம்பூர் சட்டமன்ற தொகுதி சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த எம்எல்ஏ முகமத் அசாம் கான் உயிரிழந்ததால் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதேபோல் பல்வேறு காரணங்களால் ஒடிசாவின் பதம்பூர், பீகாரின் குர்ஹானி மற்றும் சட்டீஸ்கரின் பானுபிரதாப்பூர் சட்டமன்ற தொகுதிகளும் காலியானது. இதனை தொடர்ந்து மெயின்புரி மக்களவை மற்றும் காலியாக உள்ள 5 சட்டமன்ற … Read more

சூறைக் காற்றுடன் கனமழை ராமேஸ்வரத்தில் 10 படகுகள் சேதம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த பலத்த மழைக்கு 10க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சேதமடைந்தன. ராமேஸ்வரத்தில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இரவு நேரத்தில் கடலில் பலத்த காற்றும் வீசி வருகிறது. அது போல் நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரம் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியது. இதில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் படகு நிறுத்தும் ஜெட்டி பாலத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி பக்கப்பலகைகள் உடைந்தன. இதில் பத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் விசைப்படகுகள் … Read more

ஆர்டிஐ மனுவுக்கு 9000 பக்க தகவல்: மாட்டு வண்டியில் ஏற்றி சென்ற சமூக ஆர்வலர்

சிவ்புரி: மத்தியப்பிரதேசத்தின் சிவ்புரி மாவட்டத்தில் உள்ள பைரட் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் மக்கான் தகாட். இவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதமர் ஆவாஸ் யோஜனா, அனைவரும் வீடு திட்டம் குறித்த விவரங்களை கேட்டு மனு தாக்கல் செய்தார். இரண்டு மாதங்கள் ஆன நிலையிலும் நகராட்சி பதில் அளிக்கவில்லை. பின்னர் ரூ.25 ஆயிரம் டெபாசிட் செலுத்தினால் மட்டுமே விவரங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆங்காங்கு கடன் பெற்று ரூ.25 ஆயிரத்தை மக்கான் … Read more

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

தென்காசி: குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் தம்பதி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் தம்பதி மூர்த்தி (78), பானுமதி (76), மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். வாசல் இரும்பு கேட் அருகே உள்ள மின் விளக்கில் இருந்து, மின்சாரம் பாய்ந்ததில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

உபி.யில் எம்எல்ஏ மகன் திடீர் கைது: அமலாக்கத் துறை நடவடிக்கை

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் பணமோசடி வழக்கில் எம்எல்ஏ முக்தர் அன்சாரியின் மகன் அப்பாசை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். உத்தரப்பிரதேசத்தில் உள்ள மாவ் சட்டமன்ற தொகுதியின் சுகுல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் எம்எல்ஏ முக்தர் அன்சாரி. இவர் பெரிய  தாதாவாக இருந்து அரசியல்வாதியாக மாறியவர். 5 முறை எம்எல்ஏவான இவர்  தற்போது பாண்டா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 49 கிரிமினல் வழக்குகளில் முக்தர் அன்சாரிக்கு தொடர்பு உள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்து இவரை கண்காணித்து வருகிறது. இவருக்கு … Read more

பேரிடரை எதிர்கொள்ள 65,000 களப்பணியாளர் தயார்: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேட்டி

வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே, பிளவக்கல் பெரியாறு அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இந்த 2 மாதங்களில் புயல் வந்தால் பெரிய பாதிப்பு ஏற்படும். புயல் வந்தாலும் அதனை சந்திக்க அனைத்து மாவட்ட நிர்வாகமும்  விழிப்புடன் இருக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடற்கரையோர மாவட்ட கலெக்டர்கள் விழிப்புடன் இருப்பதுடன், அவசர … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,605,004 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66.05 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,605,004 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 637,508,716 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 617,053,698 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 36,026 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.