சரித்திர உச்சம் தொட்டது விமான எரிபொருள் விலை| Dinamalar

புதுடில்லி:’ஜெட் எரிபொருள் அல்லது ஏ.டி.எப்.,’ என அழைக்கப்படும், விமான எரிபொருள் விலை, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து உள்ளது. இதையடுத்து, விமான கட்டணங்கள் உயர வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.உலகளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால், கடந்த இரண்டு மாதங்களுக்குள்ளாக, நான்கு முறை விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ளது.ஒரு கிலோ லிட்டருக்கு, கிட்டத்தட்ட 5.2 சதவீதம், அதாவது 4,482 ரூபாய் அதிகரித்து, 90 ஆயிரத்து 520 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுவரை இந்த அளவுக்கு விலை அதிகரித்தது இல்லை. இந்திய வரலாற்றில் … Read more

அடுத்தடுத்து '3 கோடி கிளப்' பாடல்களைத் தந்துள்ள அனிருத்

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் அனிருத். இந்த 2022ம் வருடம் அனிருத்தின் வருடம் என்று சொல்லுமளவிற்கு சில பல முக்கிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அடுத்த சில மாதங்களுக்கு அனிருத் இசையமைத்துள்ள முக்கிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. அந்தப் படங்களின் பாடல்கள் வெளிவந்து சூப்பர் ஹிட்டாகியும் உள்ளன. அந்தப் பாடல்கள் 3 கோடி பார்வைகளை யு டியூபில் பெற்று ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்து … Read more

குழந்தைகளுக்கு ஹெல்மெட் வருகிறது புதிய உத்தரவு| Dinamalar

புதுடில்லி:’இருசக்கர வாகனங்களில், 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அழைத்து செல்கையில், கட்டாயமாக, ‘ஹெல்மெட்’ அணிவிக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட பல்வேறு புதிய சட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.இது குறித்து, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிவிக்கை:இருசக்கர வாகனங்களில் அழைத்து செல்லப்படும் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, இருசக்கர வாகனங்களில் அழைத்து செல்லப்படும் 4 வயதுக்கு உட்பட்ட … Read more

அரபிக்குத்து – மாலத் தீவிலிருந்து பூஜாவின் அட்டகாச ஆட்டம்

தென்னிந்திய அளவில் 24 மணி நேரத்தில் அதிகப் பார்வைகளை யு டியூபில் பெற்ற பாடலாக 'பீஸ்ட்' படத்திலிருந்து இடம் பெற்ற 'அரபிக்குத்து' பாடல் புதிய சாதனையைப் படைத்தது. தற்போது 3 கோடி பார்வைகளைக் கடந்துள்ள இப்பாடல் 2.5 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது. இப்பாடலில் விஜய்யின் நடனத்தை ரசிக்கும் ரசிகர்கள் அவருக்குப் போட்டியாக ஆடும் நாயகி பூஜா ஹெக்டேவின் நடனத்தையும் ரசிக்கிறார்கள். ஏற்கெனவே தெலுங்கு சினிமாவில் சிறப்பாக நடனமாடும் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்த 'அலா வைகுந்தபுரம்லோ' படத்தில் … Read more

இலங்கை தமிழர்களுக்கு எதிரான சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்| Dinamalar

கொழும்பு:’இலங்கையில், பயங்கரவாத தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’ என, அந்நாட்டு மனித உரிமை கமிஷன் வலியுறுத்தியுள்ளது.அண்டை நாடான இலங்கையில், ௧௯௭௯ல் பயங்கரவாத தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் கீழ், பயங்கரவாதிகள் என சந்தேகப்படுவோரை விசாரணை நடத்தாமல் கைது செய்ய, போலீசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.இந்தச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக, தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், ‘பயங்கரவாத தடுப்பு சட்டத்தை திருத்த வேண்டும்’ என, இலங்கை … Read more

தமிழில் வெளிவருகிறது அன்ச்சார்டட்

ஹாலிவுட்டில் தயாராகி உள்ள புதிய படம். அன்ச்சார்டட். இதில் டாம் ஹாலண்ட், மார்க் வெல்பர்க், சோபியா அலி, டிட்டி கேப்ரில்லே, அன்டோனியா பாண்டர்ஸ் நடித்துள்ளனர். சோம்பி லேண்ட், கேங்ஸ்டர் குவார்ட், வெனம், பிக் டிரிப் உள்பட பல படங்களை இயக்கிய ரூபென் பிளிச்சர் இயக்கி உள்ளார். மென்னான்ஸ் கோல்ட், இண்டியானா ஜோன்ஸ் மாதிரியான புதையலை தேடிச் செல்லும் பேண்டசி அட்வென்ஜர் கதை. கடந்த 7ம் தேதி ஸ்பெயினில் மட்டும் வெளியிடப்பட்ட இந்த படம் வருகிற 18ம் தேதி … Read more

உக்ரைனில் போர் பதற்றம் எதிரொலி இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தல்| Dinamalar

கீவ்:கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், அங்கிருக்கும் இந்தியர்கள் தற்காலிகமாக வெளியேறும்படி, இந்திய துாதரகம் அறிவுறுத்தி உள்ளது.தன் அண்டை நாடான உக்ரைனை கைப்பற்றுவதற்காக,ரஷ்யா அதன் எல்லையில் படைகளை நிறுத்தி வைத்துள்ளது. அதனால் அங்கு போர் மூளும் சூழ்நிலை நிலவுகிறது. இதை தடுக்க மேற்கத்திய நாடுகள், ரஷ்யாவுடன் பேச்சு நடத்தி வருகின்றன.இந்நிலையில், உக்ரைனின் கீவ் நகரில் உள்ள இந்திய துாதரகம், அங்குள்ள இந்தியர்களுக்கு புதிய எச்சரிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:தற்போது அசாதாரண சூழ்நிலை … Read more

6 வக்கீல்களை நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை| Dinamalar

புதுடில்லி: சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் ஆறு பேரை நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் நியமனம் குறித்து கொலிஜியம் கூட்டம் நடைபெற்றதது.அதில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் வக்கீல்கள் நிது மோலு மாலா, சுந்தர் மோகன், கபாலி குமரேஷ்பாபு, செளந்தர், அப்துல் கனி அப்துல் ஹமீத் , ஜான் சத்யன் ஆகியோரை நீதிபதிகளாக நியனம் செய்ய மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. புதுடில்லி: சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் … Read more

நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் இணைந்த வீஜே பவித்ரா

விஜய் டிவியின் 'நாம் இருவர் நமக்க இருவர்' தொடரின் இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஆர்ஜே செந்தில், மோனிஷா, வெங்கட், காயத்ரி யுவராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இதுவரை 400 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்துள்ள இந்த தொடர், தற்போது சூப்பரான திரைக்கதை வடிவமைப்பால் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், கதையை மேலும் சுவாரசியமாக்கும் பொருட்டு சில கதாபாத்திரங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இரண்டாவது ஹீரோயினாக வீஜே பவித்ரா நடித்து … Read more

குவாட் அமைப்பு: இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு| Dinamalar

வாஷிங்டன்:’குவாட் அமைப்பின் உந்து சக்தியாக விளங்கும் இந்தியா, பிராந்திய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு முக்கிய பங்காற்றி வருகிறது’ என அமெரிக்கா தெரிவித்துஉள்ளது.இந்தோ – பசிபிக் கடல் பிராந்தியத்தில், சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சியை முறியடிக்கும் நோக்கத்தில், கடந்த 2017ம் ஆண்டு, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து, ‘குவாட்’ என்ற அமைப்பை துவக்கின.இந்நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுக்கான மாநாடு, கடந்த வாரம் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடந்தது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்ற … Read more