தினமலர்
அன்னா ஹசாரே போராட்டம் ஒத்திவைப்பு| Dinamalar
மும்பை: மஹாராஷ்டிராவில் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் பழரசம் மூலம் தயாரிக்கப்படும் ஒயின் விற்பனை செய்ய அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என அம்மாநில திறன் வளர்ச்சி துறை அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.மஹாராஷ்டிர அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, முடிவை திரும்ப பெறாவிட்டால் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், சூப்பர் … Read more
9 ஆண்டுகளுக்கு பிறகு அமீர் இயக்கத்தில் "இறைவன் மிகப்பெரியவன்"
'மவுனம் பேசியதே', 'ராம்', 'பருத்திவீரன்' ,'ஆதி பகவன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அமீர். சில காலம் நடிப்பில் கவனம் செலுத்தினார். யோகி, வட சென்னை போன்ற படங்களில் நடித்தார். இந்நிலையில் 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அவர் இயக்கும் புதிய படத்திற்கு “இறைவன் மிகப்பெரியவன் ” என தலைப்பு வைத்துள்ளார்.இந்த படத்திற்கு வெற்றிமாறன் – தங்கம் இருவரும் கதை எழுதுகின்றனர். சூரி மற்றும் ஆர்யா தம்பி சத்யா ஆகியோர் முதன்மை வேடத்தில் நடிக்க உள்ளனர். பட பிடிப்பு … Read more
இந்தியாவில் இறங்கு முகத்தில் கோவிட் பாதிப்பு| Dinamalar
புதுடில்லி: இந்தியாவில் நேற்று 44 ஆயிரமாக இருந்த தினசரி கோவிட் பாதிப்பு, கடந்த 24 மணி நேரத்தில் 34 ஆயிரமாக குறைந்தது. இது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,113 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,26,65,534 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 91,930 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,16,77,641 ஆனது. தற்போது 4,78,882 … Read more
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் உக்ரைன் நாட்டு நடிகை
சிவகார்த்திகேயனின் 20வது படத்தை அனுதீப் கேவி இயக்குகிறார். ஒரேநேரத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகும் இப்படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்கிறார். காரைக்குடியில் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்துள்ள ஒலிவியா மோரிஸ் நடிப்பதாக தகவல் வந்த நிலையில் இப்போது உக்ரைன் நாட்டை சேர்ந்த மாடல் அழகி மற்றும் நடிகை மரியா ரியாபோஸப்கா நடிக்கிறார். சுற்றுலாவுக்காக இந்தியாவிற்கு வரும் பெண்ணுடன் சிவகார்த்திகேயனுக்கு ஏற்படும் காதல் தான் இப்படத்தின் கதை என கூறப்படுகிறது.
ஆஸி., கிரிக்கெட் வீரர் திருமணத்துக்கு தமிழில் பத்திரிகை அடித்து அசத்தல்| Dinamalar
மெல்பர்ன்:பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல், தமிழ் பெண்ணான வினி ராமனை, மார்ச் 27ம் தேதி திருமணம் செய்ய உள்ளார். இதற்காக தமிழ் மொழியில் அச்சிடப்பட்டுள்ள திருமண பத்திரிகை அனைவரையும் கவர்ந்துள்ளது, நிச்சயதார்த்தம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான கிளென் மேக்ஸ்வெல், 31, சில ஆண்டுகளுக்கு முன் இந்திய வம்சாவளியான வினி ராமன், 26, என்ற தமிழ்ப் பெண்ணை சந்தித்தார். அவர்களுக்கு இடையில் காதல் ஏற்படவே, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.இதையடுத்து 2020ல் இருவீட்டாரின் சம்மதத்துடன் … Read more
ரஜினி 169 : அழுகையை அடக்க முடியாத டிடி
கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களைத் தொடர்ந்து தற்போது விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை இயக்கி இருப்பவர் நெல்சன் திலீப்குமார். இவர் அடுத்தபடியாக ரஜினியின் 169 வது படத்தை இயக்க இருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படி ஒரு மாஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டதை அடுத்து ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் விஜய் டிவியின் தொகுப்பாளினியும், நெல்சனின் தோழியுமான திவ்யதர்ஷி கூறுகையில், ‛‛என்னால அழுகையை அடக்கவே முடியலடா நெல்சா. தலைவர் சிங்கம் மாதிரி … Read more